⚡ ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

✍️ |
ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் - லைன் அப் & அப்டேட் | music director anirudh's line ups and movie update
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின் 'கிங்' படத்திற்கு இசையமைக்கிறார்

2
பாலிவுட்டில் 'சலாம் நமஸ்தே', 'ஃபைட்டர்', 'வார்' ஆகிய படங்களின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார்

3
ஷாரூக்கானுடன் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் என பலரும் நடிக்கும் இப்படம் இந்தாண்டு கடைசியில் வெளியாவதால், அதன் பாடல்கள் கம்போஸிங்கில் இருக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நானியின் 'தி பாரடைஸ்' வருகிற மார்ச் 26ம் தேதி வெளியாகிறது

5
பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவு பெற்றதுடன், டீசர், சிங்கிள் என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவரக்காத்திருக்கிறது

📌 அனியின் லைன் அப் ‘ஜவான்’ வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின் ‘கிங்’ படத்திற்கு இசையமைக்கிறார். பாலிவுட்டில் ‘சலாம் நமஸ்தே’, ‘ஃபைட்டர்’, ‘வார்’ ஆகிய படங்களின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். ஷாரூக்கானுடன் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன்…


அனியின் லைன் அப்

‘ஜவான்’ வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின் ‘கிங்’ படத்திற்கு இசையமைக்கிறார். பாலிவுட்டில் ‘சலாம் நமஸ்தே’, ‘ஃபைட்டர்’, ‘வார்’ ஆகிய படங்களின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். ஷாரூக்கானுடன் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் என பலரும் நடிக்கும் இப்படம் இந்தாண்டு கடைசியில் வெளியாவதால், அதன் பாடல்கள் கம்போஸிங்கில் இருக்கிறார்.

நானியின் ‘தி பாரடைஸ்’ வருகிற மார்ச் 26ம் தேதி வெளியாகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவு பெற்றதுடன், டீசர், சிங்கிள் என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவரக்காத்திருக்கிறது.

அனிருத், லோகேஷ்.

அனிருத், லோகேஷ்.

அனிருத்தின் குட்புக்கில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் ஹீரோவாக நடிக்கும் ‘டிசி’ படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த படத்திற்கும் இசையமைத்து வரும் அனி, லோகேஷ் அடுத்து அல்லு அர்ஜூனை வைத்து இயக்கும் ‘ஏஏ 23’வது படத்திற்கும் இசையமைக்கிறார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு நிறைவு பெரும் தருணத்தில் இருக்கிறது. ரஜினியின் போர்ஷன் நிறைவு பெற்றுவிட்டதாக தகவல். பிப்ரவரிக்கு பிறகு இதன் பின்னணி இசைக்கோர்ப்பிற்கு வருகிறார் அனி.

அதனைப் போல கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘தலைவர் 173’ படத்திற்கும் இசையமைக்கிறார். அதற்கான பாடல்கள் கம்போஸிங்கும் ஒரு பக்கம் மும்முரமாக போய்க்கொண்டிருக்கிறது. வெற்றிமாறனுடன் முதல் முறையாக இணையும் ‘அரசன்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதற்கான மான்டேஜ் பாடல்களும் ரெடியாகி வருகின்றன. அஜித் – ஆதிக் படத்திலும் இணையலாம் எனத் தகவல்.

இது தவிர விஜய்யின் ‘ஜன நாயகன்’, பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ ஆகிய படங்களும் திரைக்கு வர ரெடியாக இருக்கிறது.!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

⚡ மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில்…

மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே 'மங்காத்தா’ - விகடன் விமர்சனம் | Ajith's Mankatha Movie review by vikatan

📌 மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே ‘மங்காத்தா’ – விகடன் விமர்சனம் | Ajith’s Mankatha Movie review by vikatan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நம்புவீர்களா 2 அஜீத் படத்தில், ஹீரோ என்று யாருமே இல்லை…

" இந்த போட்டோ எடுத்தது மறக்க முடியாத தருணம்"- விஜய், அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு| “An Unforgettable Moment from Mankatha Shoot” – Venkat Prabhu Shares Photo with Vijay & Ajith

💡 ” இந்த போட்டோ எடுத்தது மறக்க முடியாத தருணம்”- விஜய், அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு| “An Unforgettable Moment from Mankatha Shoot” – Venkat Prabhu Shares Photo with Vijay & Ajith

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜுன் நடிப்பில் கடந்த…