💡 Thai Poosam | தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
thai poosam special bus 2026 01 228982f83b3ab77a8d3ef3c8eee6bcf3 Thedalweb Thai Poosam | தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Jan 29, 2026 7:30 AM ISTSpecial Bus | தைப்பூசம் மற்றும் வார இறுதி நாட்களை தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.தைப்பூசம் சிறப்பு பேருந்துதைப்பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு…


Last Updated:

Special Bus | தைப்பூசம் மற்றும் வார இறுதி நாட்களை தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தைப்பூசம் சிறப்பு பேருந்து
தைப்பூசம் சிறப்பு பேருந்து

தைப்பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சுமார் 1205 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

சனி, ஞாயிறு வார விடுமுறை நாள்கள் மற்றும் தைப்பூசத்தை ஒட்டி சென்னையிலிருந்தும், மாநிலத்தின் பிற இடங்களுக்கு இடையேயும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி சென்னை கிளம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 360 பேருந்துகளும், சனிக்கிழமை 485 பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதேபோல சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 60 பேருந்துகளும், சனிக்கிழமை 60 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5731132 cropped 28012026 163605 inshot 20260128 163056116 1 Thedalweb டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு… களைகட்டிய அரசூர் 52 அடி வராகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்...

📌 டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு… களைகட்டிய அரசூர் 52 அடி வராகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

📌 52 அடி வராகி அம்மன் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

rasi palan 2026 01 4380f66deb455ffb395a45568cd484c2 Thedalweb Astrology | 18 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்.. செவ்வாய் - சுக்கிரன் இணைவு.. கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள் இவைதான்! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Astrology | 18 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்.. செவ்வாய் – சுக்கிரன் இணைவு.. கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள் இவைதான்! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 செவ்வாய் கிரகமானது ஆற்றல், தைரியம், வலிமை, வீரம், கோபம் மற்றும்…