⚡ Tirupati Laddu | திருப்பதி லட்டு நெய்யில் விலங்கு கொழுப்பு இல்லை.. விசாரணையில் கண்டுபிடிப்பு.. ஷாக் தகவல்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Tirupati laddu 1 2026 01 bc09ff4d277e6e8f5f07ebbee4683930 Thedalweb Tirupati Laddu | திருப்பதி லட்டு நெய்யில் விலங்கு கொழுப்பு இல்லை.. விசாரணையில் கண்டுபிடிப்பு.. ஷாக் தகவல்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 31, 2026 8:18 AM ISTTirupati Laddu | போலி நெய்யை வாங்கியதால் திருப்பதி கோயிலுக்கு 234 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தகவல்.திருப்பதி லட்டுதிருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

2
அதேநேரம், லட்டு தயாரிக்க பசு நெய் பயன்படுத்தப்படவேயில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.உலக அளவில் மிகவும் பிரசித்திபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது

3
நாள்தோறும் சராசரியாக 3.5 லட்சம் முதல் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த லட்டுக்களில் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை முன்வைத்தார்

5
நாடு முழுவதும் பெரும்

📌 Last Updated:Jan 31, 2026 8:18 AM ISTTirupati Laddu | போலி நெய்யை வாங்கியதால் திருப்பதி கோயிலுக்கு 234 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தகவல்.திருப்பதி லட்டுதிருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில்…


Last Updated:

Tirupati Laddu | போலி நெய்யை வாங்கியதால் திருப்பதி கோயிலுக்கு 234 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தகவல்.

திருப்பதி லட்டு
திருப்பதி லட்டு

திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், லட்டு தயாரிக்க பசு நெய் பயன்படுத்தப்படவேயில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

உலக அளவில் மிகவும் பிரசித்திபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. நாள்தோறும் சராசரியாக 3.5 லட்சம் முதல் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டுக்களில் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை முன்வைத்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்து அவர் உத்தரவிட்டிருந்தார். சிபிஐ தலைமையில் இந்த சிறப்புக்குழு கலப்பட நெய் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி சிபிஐ, முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், 15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் நெல்லூர் நீதிமன்றத்தில் 223 பக்க இறுதி குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில், லட்டுவில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு அல்லது மீன் எண்ணெய் போன்ற விலங்கு கொழுப்பு எதுவும் கலக்கப்படவில்லை என்பதை சிபிஐ உறுதிப்படுத்தியுள்ளது. 2024- ஆம் ஆண்டு கூறப்பட்ட “விலங்கு கொழுப்பு” புகார்களை அறிவியல் பூர்வமாக சிபிஐ மறுத்துள்ளது. ஆய்வக சோதனைகளில் தெரிந்த சில முரண்பாடுகள் தாவர எண்ணெய்களாலும் செயற்கை வேதிப்பொருட்களாலும் ஏற்பட்டவை என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.

லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது நெய்யே அல்ல; அது ஒரு “செயற்கை கலவை” என சிபிஐ தெரிவித்துள்ளது. 5.2 லட்சம் கிலோ பனை எண்ணெய், 2 லட்சம் கிலோ பாம் கர்னல் எண்ணெய், 2.5 லிட்சம் கிலோ பால்மோலின் ஆகியவை முக்கியமாக கலக்கப்பட்டிருந்தன. லட்டுவில் மணம் மற்றும் நிறத்தைக் கொண்டுவர பீட்டா-கரோட்டின், அசிட்டிக் ஆசிட் எஸ்டர், லாக்டிக் அமிலம் மற்றும் செயற்கை நெய் வாசனை திரவியங்கள் பயன்படுத்தப்பட்டன.

2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுமார் 234 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஐந்தாண்டு காலத்தில் சுமார் 68 லட்சம் கிலோ எடையுள்ள போலி நெய் திருமலைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ‘போலே பாபா ஆர்கானிக் டெய்ரி’ என்ற நிறுவனம், தனது ஆலைகளில் ஒரு சொட்டுப் பாலைக் கூட பதப்படுத்தாமல், இந்த போலி நெய்யை தயாரித்து வழங்கியது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஏ.ஆர். டெய்ரி, ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி மற்றும் மகாராஷ்டிராவின் மல்கங்கா மில்க் ஆகிய நிறுவனங்களும் போலி நெய் விநியோகம் செய்துள்ளன.

நெய்யின் தூய்மையைச் சோதிக்கப் பயன்படும் ரீச்சர்ட் மீசல் (Reichert-Meissl) மதிப்பை ஏமாற்ற, விநியோகஸ்தர்கள் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் ஆய்வகச் சோதனைகளில் அது தூய நெய் போலவே காட்சியளித்துள்ளது. 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தரம் குறைந்ததாகக் கூறி தேவஸ்தான நிர்வாகத்தால் திருப்பி அனுப்பப்பட்ட 4 லாரிகள் நெய், மீண்டும் அதே நிறுவனங்களால் புதிய லேபிள்கள் ஒட்டப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் கோயிலுக்கு விநியோகம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர், பால்வளத் துறை அதிகாரிகள் 5 பேர் உட்பட மொத்தம் 36 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போலே பாபா நிறுவனத்தின் இயக்குநர்கள் போமில் ஜெயின் மற்றும் விபின் ஜெயின் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரின் உதவியாளர் சின்ன அப்பனா, 1 கிலோ கலப்பட நெய்க்கு 25 ரூபாய் கமிஷன் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலுக்கு தொடர்பில்லாத சில வெளிநாட்டு நிபுணர்களும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளிப் பொருட்கள், செல்போன் உள்ளிட்டவற்றை லஞ்சமாக பெற்றுக் கொண்டு தேவஸ்தான அதிகாரிகள் போலி நெய் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5736412 cropped 31012026 102908 maruthamalaimurugantemple5 1 Thedalweb Thaipusam Traffic Change: ஜன.31 முதல் பிப்.2 வரை போக்குவரத்து மாற்றம்… மருதமலை செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு... | தமிழ்நாடு போட்டோகேலரி

⚡ Thaipusam Traffic Change: ஜன.31 முதல் பிப்.2 வரை போக்குவரத்து மாற்றம்… மருதமலை செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு… | தமிழ்நாடு போட்டோகேலரி

📌 வாகனங்கள் நிறுத்துமிடங்கள்: மருதமலைக் கோயிலுக்கு காா்கள் மூலம் வருவோா் பாரதியாா் பல்கலைக்கழக குடியிருப்பு வளாகம், அரசு சட்டக்…

HYP 5735789 cropped 30012026 202014 picsart 260130 200250138 w 1 Thedalweb பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ சேவை... மத நல்லினக்கத்தை காட்டிய இஸ்லாமியர்கள்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✅ பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ சேவை… மத நல்லினக்கத்தை காட்டிய இஸ்லாமியர்கள்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Last Updated:Jan 31, 2026 9:44 AM ISTதிண்டுக்கல் சாலையில் பாதயாத்திரையாக நடந்து வரும் முருக பக்தர்களுக்கு…