💡 தைப்பூசம் 2026 : முருகனின் அறுப்படை வீடுகளில் கோலாகல கொண்டாட்டம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
palani thaipoosam 2026 02 4d540ec033e31761dd976b7496bd3834 Thedalweb தைப்பூசம் 2026 : முருகனின் அறுப்படை வீடுகளில் கோலாகல கொண்டாட்டம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 01, 2026 9:15 AM ISTதைப்பூசம் 2026 பழனி, திருச்செந்தூர், மருதமலை, கோலாலம்பூர், பத்துமலை முருகன் கோயில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

2
1.7 லட்சம் பேர் பழனியில் தரிசனம் செய்தனர்.தைப்பூசம் முருகன் கோயில்களில் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.முருகனின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனியில் பக்தர்களின் காவடி நடனம் பார்ப்போரை கவர்ந்திழுத்தது

3
தைப்பூச திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று மட்டும் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் தரிசித்தனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதேபோன்று, திருச்செந்தூரில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் உடல் முழுவதும் திருநீறணிந்து பக்தி கோஷம் முழங்க நடனமாடினர்

5
ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.தைப்பூசத்தையொட்டி பழனி மலை விழாக்கோலம் பூண்டது.

📌 Last Updated:Feb 01, 2026 9:15 AM ISTதைப்பூசம் 2026 பழனி, திருச்செந்தூர், மருதமலை, கோலாலம்பூர், பத்துமலை முருகன் கோயில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 1.7 லட்சம் பேர் பழனியில் தரிசனம் செய்தனர்.தைப்பூசம் முருகன் கோயில்களில் இன்று தைப்பூசத்…


Last Updated:

தைப்பூசம் 2026 பழனி, திருச்செந்தூர், மருதமலை, கோலாலம்பூர், பத்துமலை முருகன் கோயில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 1.7 லட்சம் பேர் பழனியில் தரிசனம் செய்தனர்.

தைப்பூசம்
தைப்பூசம்

முருகன் கோயில்களில் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனியில் பக்தர்களின் காவடி நடனம் பார்ப்போரை கவர்ந்திழுத்தது. தைப்பூச திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று மட்டும் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் தரிசித்தனர். இதேபோன்று, திருச்செந்தூரில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் உடல் முழுவதும் திருநீறணிந்து பக்தி கோஷம் முழங்க நடனமாடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தைப்பூசத்தையொட்டி பழனி மலை விழாக்கோலம் பூண்டது. காவடி சுமந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கிரிவலப்பாதையில் மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வலம் வந்தனர். இதனால், பழனி மலையைச் சுற்றி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், மருதமலையில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. திருவாபரணங்கள் அணிந்து மணக்கோலத்தில் காட்சி அளித்த முருகனை கண்ட பக்தர்கள், “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என விண்ணதிர முழக்கமிட்டு வழிபட்டனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தைப்பூச திருவிழாவையொட்டி, வெள்ளித்தேர் ஊர்வலம் நடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா தொடங்கி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வெள்ளித்தேர் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கிடையே பத்துமலை முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி சுமந்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

personality test 2026 03 218868ce14c032aa734f6d6830f0f865 1200x675 Thedalweb Personality Traits | நீங்கள் தூங்கும் நிலையே உங்க ஆளுமை சொல்லும்.. உங்க குணாதிசயங்கள் என்ன தெரிஞ்சுக்கோங்க! | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 Personality Traits | நீங்கள் தூங்கும் நிலையே உங்க ஆளுமை சொல்லும்.. உங்க குணாதிசயங்கள் என்ன தெரிஞ்சுக்கோங்க! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஒரு சாய்த்து தூங்கும் நிலை:நீங்கள் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில்…

HYP 5798916 cropped 06032026 095147 inshot 20260306 095133575 2 1200x675 Thedalweb திருப்பதி செல்ல பக்தர்களின் கவனத்திற்கு... யுகாதியை முன்னிட்டு சிறப்பு தரிசனங்கள் ரத்து...

📌 திருப்பதி செல்ல பக்தர்களின் கவனத்திற்கு… யுகாதியை முன்னிட்டு சிறப்பு தரிசனங்கள் ரத்து…

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மார்ச் 17-ந்தேதி செவ்வாய்க்கிழமை கோவில் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன…