💡 தங்க கவசத்தில் காட்சியளித்த முருகன்… மயிலம் முருகன் கோவிலில் தைப்பூச விழா கோலாகலம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5738849 cropped 01022026 161105 img 20260201 100844 waterm 1 Thedalweb தங்க கவசத்தில் காட்சியளித்த முருகன்... மயிலம் முருகன் கோவிலில் தைப்பூச விழா கோலாகலம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 01, 2026 6:08 PM ISTமயிலம் முருகன் கோவிலில் தைப்பூச விழாவிற்காக முருகனுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், 1008 சங்கு அபிஷேகமும் நடைபெற்றது.முருகன் கோவிலில் ஒலித்த அரோகரா அரோகரா கோஷங்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலத்தில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது

2
இங்கு முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வடிவ மலையில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்

3
அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நடந்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16

📌 Last Updated:Feb 01, 2026 6:08 PM ISTமயிலம் முருகன் கோவிலில் தைப்பூச விழாவிற்காக முருகனுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், 1008 சங்கு அபிஷேகமும் நடைபெற்றது.முருகன் கோவிலில் ஒலித்த அரோகரா அரோகரா கோஷங்கள் விழுப்புரம் மாவட்டம்…


Last Updated:

மயிலம் முருகன் கோவிலில் தைப்பூச விழாவிற்காக முருகனுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், 1008 சங்கு அபிஷேகமும் நடைபெற்றது.

முருகன் கோவிலில் ஒலித்த அரோகரா அரோகரா கோஷங்கள் 
முருகன் கோவிலில் ஒலித்த அரோகரா அரோகரா கோஷங்கள் 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலத்தில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வடிவ மலையில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், காலை 6 மணிக்கு 1008 சங்கு அபிஷேகமும் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து முருகன் தங்க கவசம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தைப்பூசத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்தும், பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்தும், மொட்டை அடித்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…