⚡ ஹைக்கூ கவிதைப் போட்டி: “இந்த விழாவை உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தணும்னு விரும்புறேன்” – லிங்குசாமி | director lingusamy shared about his haiku competition

✍️ |
ஹைக்கூ கவிதைப் போட்டி: "இந்த விழாவை உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தணும்னு விரும்புறேன்" - லிங்குசாமி | director lingusamy shared about his haiku competition
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஒவ்வொரு வருஷ போட்டியின்போதும் 10 ஆயிரம் கவிதைகள் வரும்

2
உலகம் முழுவதுமிருந்து எங்கேங்கோ இருந்து அற்புதம், அற்புதமாக எழுதி அனுப்பிடுறாங்க

3
அதில் இருந்து 53 கவிதைகளைத் தேர்வு செய்து தனி நூலாகக் கொண்டு வர்றோம்.முதல் மூணு கவிதைகளுக்கு மட்டும் 25 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் எனப் பரிசுக்கள் உண்டு
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தேர்வார்கும் 50 கவிதைகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் பரிசுகள் அளிக்கிறோம்

5
'மெல்ல அசையும் கோவில் யானை', 'கொக்கோடு பறக்கும் மீன்', 'சூரியனை சுமந்து செல்லும் பாட்டி', 'வாடியது கொக்கு' ஆகிய கவிதை நூல்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.இப்படி 10 ஆயிரம் கவிதைகள்ல இருந்து 53 கவிதைகளைத் தேர்வு செய்யறது பெரிய சிரமம்னாலும் அந்த 53 கவிதைகள்ல இருந்து முதல், இரண்டாம்,

📌 ஒவ்வொரு வருஷ போட்டியின்போதும் 10 ஆயிரம் கவிதைகள் வரும். உலகம் முழுவதுமிருந்து எங்கேங்கோ இருந்து அற்புதம், அற்புதமாக எழுதி அனுப்பிடுறாங்க. அதில் இருந்து 53 கவிதைகளைத் தேர்வு செய்து தனி நூலாகக் கொண்டு வர்றோம்.முதல் மூணு கவிதைகளுக்கு…


ஒவ்வொரு வருஷ போட்டியின்போதும் 10 ஆயிரம் கவிதைகள் வரும். உலகம் முழுவதுமிருந்து எங்கேங்கோ இருந்து அற்புதம், அற்புதமாக எழுதி அனுப்பிடுறாங்க. அதில் இருந்து 53 கவிதைகளைத் தேர்வு செய்து தனி நூலாகக் கொண்டு வர்றோம்.

முதல் மூணு கவிதைகளுக்கு மட்டும் 25 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் எனப் பரிசுக்கள் உண்டு. தேர்வார்கும் 50 கவிதைகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் பரிசுகள் அளிக்கிறோம். ‘மெல்ல அசையும் கோவில் யானை’, ‘கொக்கோடு பறக்கும் மீன்’, ‘சூரியனை சுமந்து செல்லும் பாட்டி’, ‘வாடியது கொக்கு’ ஆகிய கவிதை நூல்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.

இப்படி 10 ஆயிரம் கவிதைகள்ல இருந்து 53 கவிதைகளைத் தேர்வு செய்யறது பெரிய சிரமம்னாலும் அந்த 53 கவிதைகள்ல இருந்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்யறது ரொம்ப ரொம்ப சிரமானது. 1..2.. 3.. என்பது சும்மா தேர்வு செய்யணுமே என்பதற்காகத்தான் எடுப்போம். ஆனா, இந்த 1.. 2… 3.. என்பது 53 கவிதைகளுமே 1…2.. 3.. தான்!

ஏன்னா, அவ்வளவும் தரமான கவிதைகளாகத்தான் இருக்கும். இந்தக் கவிதை போட்டிக்கு கு.ஞானசம்பந்தம், நண்பர்கள் மிஷ்கின், கௌதம்மேனன், நடிகைகள் அபிராமி, ப்ரியா பவானிசங்கர்னு பலரும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்காங்க.

லிங்குசாமி

லிங்குசாமி

இந்த விழா வருஷா வருஷம் அப்துல்ரகுமான் ஐயாவோட பிறந்த தினமான ஜூன் 2ம் தேதி அன்று நடக்கும். இந்த வருஷமும் அப்படி ஜூனில்தான் நடக்கிறது. இப்ப போட்டியை அறிவிச்சிருக்கோம். தேர்வான கவிதைகள் குறித்த போட்டி முடிவுகள் மே மாதம் அறிவிப்போம். இந்த முறை முக்கியமான நடுவர்கள் குழு பங்கேற்கிறாங்க.

ஒவ்வொரு முறையும் விழா மேடையில்தான் நடுவர்கள் யார் யாரென அறிவிப்போம். இன்னொரு முக்கியமான விஷயம் நடுவர்கள் குழுவிற்கு கவிதைகள் மட்டுமே அனுப்பி வைப்போம். யார் எழுதினாங்க என்கிற விபரமே யாருக்கும் தெரியாது. இந்தச் சமயத்துல நண்பர் ஆர்.சிவக்குமார் சாருக்கும் பெரிய நன்றி சொல்லிக்கறேன்.

கவிதைகள் மீது மிகப்பெரிய ஆர்வம் உள்ளார். பரிசுத் தொகை, விழாவுக்கான செலவுகள் எல்லாமும் அவர் பொறுப்பேத்துகுவார். இது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விழா என்பதாலும், கவிதைகள் மீதான பிரியமும் இருக்கறதால இந்த விழாவை உண்மையாகவும் நேர்மையாகவும் நடத்தணும்னு நானே விரும்புறேன்” என்கிறார் லிங்குசாமி.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

`மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?'- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?

🔥 `மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?’- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவர் மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே…

"கூடிய சீக்கிரம் நான் சரியாகி நடக்கத் தொடங்கிடுவேன்!" - பொன்னம்பலம் பேட்டி |"I will get well soon and start walking!" - Ponnambalam Interview

✅ “கூடிய சீக்கிரம் நான் சரியாகி நடக்கத் தொடங்கிடுவேன்!” – பொன்னம்பலம் பேட்டி |”I will get well soon and start walking!” – Ponnambalam Interview

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நான் பணியாற்றிய இயக்குநர்கள் அதைப் பார்த்தா அவங்களுக்கு சிரிப்புதான் வரும்…

"அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது"- வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்| It was a huge challenge for me” – A.R. Rahman on the song “Vennelave Vennelave

🔥 “அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது”- வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்| It was a huge challenge for me” – A.R. Rahman on the song “Vennelave Vennelave

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான…