📌 மோகனூர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா… செண்டை மேளம் முழங்க பவனி வந்த தேர்… | நாமக்கல் செய்தி (Namakkal News)

✍️ |
HYP 5757715 cropped 11022026 134842 incollage 20260211 1156267 2 Thedalweb மோகனூர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா... செண்டை மேளம் முழங்க பவனி வந்த தேர்... | நாமக்கல் செய்தி (Namakkal News)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 11, 2026 4:16 PM ISTமோகனூர் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 91ஆம் ஆண்டு திருத்தேர் பவனி விழா விமர்சையாக நடைபெற்றது.+ புனித செபஸ்டியார் 91 ஆம் ஆண்டு தேர் திருவிழாநாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஆர்சி பேட்டை பாளையத்தில் புனித செபஸ்தியார் தேவாலயம் அமைந்துள்ளது

2
இந்த ஆலயத்தில் 91ஆம் ஆண்டு திருத்தேர் பவனி விழா மிக விமர்சையாக இரவு நடைபெற்றது.இந்நிகழ்வில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பி.ராமலிங்கம் கலந்து கொண்டு புனித செபஸ்தியார் திருத்தேர் பவனியைத் துவக்கி வைத்தார்

3
மேலும், இந்நிகழ்வில் ஆர்சி பேட்டபாளையம் பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அனைவரையும் வரவேற்றார்.பின்னர் மின்னொளி அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் புனித செபஸ்தியார் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
விழாவின் முக்கிய நிகழ்வான

📌 Last Updated:Feb 11, 2026 4:16 PM ISTமோகனூர் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 91ஆம் ஆண்டு திருத்தேர் பவனி விழா விமர்சையாக நடைபெற்றது.+ புனித செபஸ்டியார் 91 ஆம் ஆண்டு தேர் திருவிழாநாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த…


Last Updated:

மோகனூர் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 91ஆம் ஆண்டு திருத்தேர் பவனி விழா விமர்சையாக நடைபெற்றது.

+

புனித

புனித செபஸ்டியார் 91 ஆம் ஆண்டு தேர் திருவிழா

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஆர்சி பேட்டை பாளையத்தில் புனித செபஸ்தியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் 91ஆம் ஆண்டு திருத்தேர் பவனி விழா மிக விமர்சையாக இரவு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பி.ராமலிங்கம் கலந்து கொண்டு புனித செபஸ்தியார் திருத்தேர் பவனியைத் துவக்கி வைத்தார். மேலும், இந்நிகழ்வில் ஆர்சி பேட்டபாளையம் பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அனைவரையும் வரவேற்றார்.

பின்னர் மின்னொளி அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் புனித செபஸ்தியார் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி, ஆலய வளாகத்திலிருந்து தொடங்கி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

மலர் அலங்காரத்துடன் அழகுபடுத்தப்பட்ட தேரில் புனித செபஸ்தியார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கினார். ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்து தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.

திருவிழாவையொட்டி ஆலய வளாகம் முழுவதும் வண்ணமயமான விளக்குகள் மற்றும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் பலர் கலந்து கொண்டு திருவிழாவைச் சிறப்பித்தனர். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

91 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த தேர் திருவிழா, மோகனூர் பகுதி மக்களின் ஆன்மீக ஒற்றுமையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருவிழா நிறைவில் இறை ஆசீர்வாதத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…