✅ Maha Shivaratri | மகாசிவராத்திரி 2026.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்.. ரயில்வே அறிவிப்பு! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Special trains 2026 02 1f7815c241fe445f6bd0c9db32bc435e Thedalweb Maha Shivaratri | மகாசிவராத்திரி 2026.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்.. ரயில்வே அறிவிப்பு! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 14, 2026 7:50 AM ISTSpecial Trains | நாளை காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.சிறப்பு ரயில்மகா சிவராத்திரியை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை எழும்பூரில் இருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூருக்குக் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.நாளை காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மதியம் 3 மணிக்குத் திருவண்ணாமலை சென்றடையும்

2
மறுமார்க்கத்தில், நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்குத் திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், காலை 9.15 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும்

3
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று மதியம் 12 மணிக்குத் தொடங்குகிறது.இதேபோல்,
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 14, 2026 7:50 AM ISTSpecial Trains | நாளை காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.சிறப்பு ரயில்மகா சிவராத்திரியை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும்…


Last Updated:

Special Trains | நாளை காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

மகா சிவராத்திரியை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை எழும்பூரில் இருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூருக்குக் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மதியம் 3 மணிக்குத் திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கத்தில், நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்குத் திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், காலை 9.15 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று மதியம் 12 மணிக்குத் தொடங்குகிறது.

இதேபோல், சென்னை எழும்பூர் – வேலூர் கண்டோன்மெண்ட் இடையே முன்பதிவில்லா மெமு (MEMU) சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 12 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மாலை 6 மணிக்கு வேலூர் சென்றடையும். மறுநாள் அதிகாலை 3 மணிக்கு வேலூரில் இருந்து புறப்படும் ரயில், காலை 9.15 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.

இதனிடையே, பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய இரு தேதிகளிலும், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்