✅ மகா சிவராத்திரி: சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்… கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் தொடக்கம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
sivarathiri 2026 02 d6d2fc29cec9b18680b93bd1d42a2d37 Thedalweb மகா சிவராத்திரி: சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்... கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் தொடக்கம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 15, 2026 9:41 AM ISTநள்ளிரவு முதலே தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத்துறை கேட் முன்பாக வரிசையில் காத்திருந்த பக்தர்கள், காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டதும் மலையேற அனுமதிக்கப்பட்டனர்

2
அதைத்தொடர்ந்து பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.News18மகா சிவராத்திரியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, நவராத்திரி, மகா சிவராத்திரி ஆகிய முக்கிய நாட்களில் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது

3
அதன்படி, சிவராத்திரியையொட்டி தமிழ்நாட்டின்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 15, 2026 9:41 AM ISTநள்ளிரவு முதலே தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத்துறை கேட் முன்பாக வரிசையில் காத்திருந்த பக்தர்கள், காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டதும் மலையேற அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள்…


Last Updated:

நள்ளிரவு முதலே தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத்துறை கேட் முன்பாக வரிசையில் காத்திருந்த பக்தர்கள், காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டதும் மலையேற அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

News18
News18

மகா சிவராத்திரியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, நவராத்திரி, மகா சிவராத்திரி ஆகிய முக்கிய நாட்களில் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. அதன்படி, சிவராத்திரியையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிந்துள்ளனர்.

`சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து சுவாமிக்கு இன்றிரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளன. இந்த பூஜையில் இரவு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் தொடங்கியுள்ளது. முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து பக்தர்கள் நேற்று ஓட்டத்தை தொடங்கினர். காவி உடை அணிந்து கோவிந்தா… கோபாலா… என்ற பக்தி கோஷத்துடன் கையில் விசிறி ஏந்தி சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை உள்ளிட்ட 12 சிவாலயங்களில் தரிசனம் செய்து விட்டு சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பக்தர்கள் இன்று மாலை நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலை வந்தடைய உள்ளனர். அங்கு இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர்.

தமிழ் செய்திகள்/ஆன்மிகம்/

மகா சிவராத்திரி: சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்… கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் தொடக்கம்!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்