✅ கடற்கரையில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஐரோப்பிய கட்டட கலை… மணப்பாடு ஹோலி ஹோஸ்ட் ஆலயம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5763599 cropped 14022026 114550 screenshot 20260214 114522 2 Thedalweb கடற்கரையில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஐரோப்பிய கட்டட கலை... மணப்பாடு ஹோலி ஹோஸ்ட் ஆலயம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 16, 2026 12:14 PM ISTமணப்பாடு ஹோலி ஹோஸ்ட் ஆலயம் 9ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சுமார் 1851ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.+ Ghost church தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ள Holy Ghost Church நூற்றாண்டுகள் கடந்தும் கிறிஸ்தவ வரலாற்றின் முக்கிய சாட்சியாக விளங்குகிறது.போர்ச்சுக்கீசியர்கள் தமிழகக் கடற்கரைக்கு வந்த காலத்தில், கிறிஸ்தவ மதப் பரவலுக்காகக் கட்டப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்

2
மணப்பாடு பகுதி ஆரம்ப காலத்திலேயே கத்தோலிக்க மதத்தின் முக்கிய மையமாக இருந்ததால், பல பழமையான தேவாலயங்கள் இங்கு உருவாகின.இன்றைய புனித ஆவி ஆலயம் உருவானது 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சுமார் 1851ஆம் ஆண்டு என வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன

3
இதற்கு முன்பு அதே இடத்தில் ‘அவர் லேடி
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 16, 2026 12:14 PM ISTமணப்பாடு ஹோலி ஹோஸ்ட் ஆலயம் 9ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சுமார் 1851ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.+ Ghost church தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ள Holy Ghost Church…


Last Updated:

மணப்பாடு ஹோலி ஹோஸ்ட் ஆலயம் 9ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சுமார் 1851ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

+

Ghost

Ghost church 

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ள Holy Ghost Church நூற்றாண்டுகள் கடந்தும் கிறிஸ்தவ வரலாற்றின் முக்கிய சாட்சியாக விளங்குகிறது.

போர்ச்சுக்கீசியர்கள் தமிழகக் கடற்கரைக்கு வந்த காலத்தில், கிறிஸ்தவ மதப் பரவலுக்காகக் கட்டப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். மணப்பாடு பகுதி ஆரம்ப காலத்திலேயே கத்தோலிக்க மதத்தின் முக்கிய மையமாக இருந்ததால், பல பழமையான தேவாலயங்கள் இங்கு உருவாகின.

இன்றைய புனித ஆவி ஆலயம் உருவானது 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சுமார் 1851ஆம் ஆண்டு என வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு அதே இடத்தில் ‘அவர் லேடி ஆஃப் அஸம்ப்ஷன்’ எனப்படும் பழைய தேவாலயம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

டச்சு ஆட்சி காலத்தில் அந்த ஆலயம் சேதமடைந்ததையடுத்து, அதன் சில கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி புதிய ஆலயமாகப் புனித ஆவி ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கட்டிடக்கலை பழமையான ஐரோப்பிய பாணியை பிரதிபலிக்கிறது.

தடித்த சுவர்கள், உயரமான கூரை அமைப்பு மற்றும் கடற்காற்றை தாங்கும் வகையிலான கட்டுமானம் இதன் சிறப்பம்சமாகும். கடல் பயணிகள் மற்றும் மீனவர்களுக்கான ஆன்மீக பாதுகாப்பு தலமாகவும் இது கருதப்படுகிறது.

இந்த ஆலயம் “Holy Ghost Church” என அழைக்கப்படுவதற்கான காரணம், கிறிஸ்தவ மதத்தின் மூன்றாவது தெய்வீக அம்சமான புனித ஆவியை (Holy Spirit) அர்ப்பணித்து உருவாக்கப்பட்டதே. இங்கு ‘Ghost’ என்ற சொல்லுக்கு பயங்கரமான அல்லது மர்மமான பொருள் கிடையாது. கிறிஸ்தவ தத்துவத்தில் ‘Holy Ghost’ என்பது கடவுளின் ஆவியையும், தெய்வீக சக்தியையும் குறிக்கும் ஆன்மீக சொல்லாகும்.

இன்றும் புனித ஆவி ஆலயம் மணப்பாடு மக்களின் ஆன்மீக வாழ்வில் முக்கிய இடம் வகித்து வருகிறது. வழிபாடுகள், திருவிழாக்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த பழமையான ஆலயம், மத நம்பிக்கையையும், வரலாற்றுப் பாரம்பரியத்தையும் ஒன்றாகக் கொண்டு நிற்கும் மணப்பாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்