💡 Ash Wednesday: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம்… சாம்பல் புதனுடன் தொடக்கம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5771805 cropped 18022026 160158 inshot 20260218 155645019 1 Thedalweb Ash Wednesday: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம்... சாம்பல் புதனுடன் தொடக்கம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 18, 2026 5:00 PM ISTAsh Wednesday: நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் தேவாலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி வழிபாடு நடைபெற்றது.+ சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட பொதுமக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாட்கள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடங்கியது

2
இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க பேராலயமான நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி வழிபாடு இன்று காலை நடைபெற்றது.இந்த திருப்பலிக்கு கோட்டாறு மறைமாவட்டம் பேராயர் நசரேன் சூசை தலைமையேற்று திருப்பலியை நடத்தினார்

3
இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
திருப்பலியின் போது, பங்கேற்றவர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டு, மனமாற்றம்,

📌 Last Updated:Feb 18, 2026 5:00 PM ISTAsh Wednesday: நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் தேவாலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி வழிபாடு நடைபெற்றது.+ சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட பொதுமக்கள் உலகம் முழுவதும்…


Last Updated:

Ash Wednesday: நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் தேவாலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி வழிபாடு நடைபெற்றது.

+

சாம்பல்

சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட பொதுமக்கள் 

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாட்கள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க பேராலயமான நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி வழிபாடு இன்று காலை நடைபெற்றது.

இந்த திருப்பலிக்கு கோட்டாறு மறைமாவட்டம் பேராயர் நசரேன் சூசை தலைமையேற்று திருப்பலியை நடத்தினார். இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். திருப்பலியின் போது, பங்கேற்றவர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டு, மனமாற்றம், நோன்பு, ஜெபம் மற்றும் தானதர்மம் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டிய தவக்காலத்தின் ஆன்மிகப் பயணம் தொடங்கப்பட்டது.

“மனந்திரும்புங்கள், நற்செய்தியில் நம்பிக்கை கொள்க” என்ற செய்தியுடன் ஆன்மிக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சாம்பல் புதன் நாளில் தொடங்கும் இந்த தவக்காலம், இயேசு கிறிஸ்துவின் துன்ப பாதையை நினைவுகூரும் விதமாக 40 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் நிறைவாக ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது.

நிகழ்வின் போது தேவாலய வளாகம் முழுவதும் ஆன்மிக ஒற்றுமை மற்றும் பக்தி சூழ்நிலை நிலவியது. காவல் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்