🚀 சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு… நீலகிரியில் திரளான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5771892 cropped 18022026 162840 inshot 20260218 162049287 2 Thedalweb சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு... நீலகிரியில் திரளான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Feb 18, 2026 5:57 PM ISTநீலகிரியின் முதல் கத்தோலிக்க ஆலயமான செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.+ சாம்பல் புதன்உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் ஏசுவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூறும்…


Last Updated:

நீலகிரியின் முதல் கத்தோலிக்க ஆலயமான செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

சாம்பல்

சாம்பல் புதன்

உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் ஏசுவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூறும் தவக்காலம் சாம்பல் புதனான இன்று துவங்கியது. கடந்த வருடம் வழங்கிய காய்ந்த குருத்தோலைகளை எரித்த சாம்பலை சிறப்பு திருப்பலியில் குருக்கள் புனிதப்படுத்தி மக்களின் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து பூசுவார்கள்.

நீலகிரியின் முதல் கத்தோலிக்க ஆலயமான செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் மறைமாவட்ட ஆன்மீக குரு ஞானதாஸ், உதவி பங்கு குருக்கள் டினோ பிராங்க் மற்றும் டோம்னிக் தலைமையில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

திருப்பலியில் சாம்பல் புனிதப்படுத்தப்பட்டு மக்களின் நெற்றியில் “மனம் திரும்பி நற்செய்தியை அறிவியுங்கள்” என்று கூறி பூசப்பட்டது. சாம்பல் புதனிலிருந்து நாற்பது நாட்கள் உபவாசம், தவம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தினமும் ஏசுவின் பாடுகளை நினைவுகூரும் சிலுவைப் பாதை எல்லா ஆலயங்களிலும் நடைபெறுகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு சிலுவைப் பாதை, மறையுரை, திருப்பலி நடைபெறும்.

குருசடி, கேரளா மலையாற்றூர் மற்றும் பதினான்கு ஆலயங்களுக்கு திருயாத்திரை மேற்கொள்ளவும் ஆயத்தமாயினர். இந்த சாம்பல் புதன் வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தேவாலயங்களிலும் இன்று சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்