🔥 தூத்துக்குடியில் சாம்பல் புதன் வழிபாடு… தவக்காலத்தை தொடங்கிய கிறிஸ்தவர்கள்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5772520 cropped 18022026 223305 screenshot 20260218 220222 2 Thedalweb தூத்துக்குடியில் சாம்பல் புதன் வழிபாடு... தவக்காலத்தை தொடங்கிய கிறிஸ்தவர்கள்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 19, 2026 10:42 AM ISTஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, தீய சக்திகள் வழங்கிய சோதனைகளைத் தாங்கி, தன்னை ஆன்மிக ரீதியாகத் தயார்ப்படுத்திக் கொண்ட நாட்களே இந்த 40 நாள் தவக்காலமாகக் கருதப்படுகிறது.+ Ash wednesday சாம்பல் புதன் (Ash Wednesday) அல்லது திருநீற்று புதன் என்று அழைக்கப்படும் நாள், கிறிஸ்தவர்களின் ஆன்மிக வாழ்க்கையில் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது

2
இந்த நாளிலிருந்தே, கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை, நோன்பு மற்றும் தியானம் நிறைந்த தவக்காலத்தை (Lent) தொடங்குகின்றனர்.ஈஸ்டர் திருநாளுக்கு முன்பாக நடைபெறும் 6 வார தவக்காலத்தின் தொடக்க நாளே இந்த சாம்பல் புதனாகும்

3
இந்த நாளில், விசுவாசிகள் தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு திருப்பலிகளில் கலந்து கொண்டு, தங்களது நெற்றியில் புனித
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 19, 2026 10:42 AM ISTஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, தீய சக்திகள் வழங்கிய சோதனைகளைத் தாங்கி, தன்னை ஆன்மிக ரீதியாகத் தயார்ப்படுத்திக் கொண்ட நாட்களே இந்த 40 நாள் தவக்காலமாகக் கருதப்படுகிறது.+…


Last Updated:

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, தீய சக்திகள் வழங்கிய சோதனைகளைத் தாங்கி, தன்னை ஆன்மிக ரீதியாகத் தயார்ப்படுத்திக் கொண்ட நாட்களே இந்த 40 நாள் தவக்காலமாகக் கருதப்படுகிறது.

+

Ash

Ash wednesday 

சாம்பல் புதன் (Ash Wednesday) அல்லது திருநீற்று புதன் என்று அழைக்கப்படும் நாள், கிறிஸ்தவர்களின் ஆன்மிக வாழ்க்கையில் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளிலிருந்தே, கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை, நோன்பு மற்றும் தியானம் நிறைந்த தவக்காலத்தை (Lent) தொடங்குகின்றனர்.

ஈஸ்டர் திருநாளுக்கு முன்பாக நடைபெறும் 6 வார தவக்காலத்தின் தொடக்க நாளே இந்த சாம்பல் புதனாகும். இந்த நாளில், விசுவாசிகள் தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு திருப்பலிகளில் கலந்து கொண்டு, தங்களது நெற்றியில் புனித சாம்பலை பூசிக்கொள்கிறார்கள். இந்த சாம்பல், மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும், மனமாற்றம் மற்றும் ஆன்மிக புதுப்பிப்பையும் குறிக்கும் அடையாளமாக விளங்குகிறது.

சாம்பல் புதனன்று தொடங்கும் தவக்காலம் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்று, ஈஸ்டர் திருநாளன்று நிறைவடைகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, தீய சக்திகள் வழங்கிய சோதனைகளைத் தாங்கி, தன்னை ஆன்மிக ரீதியாகத் தயார்ப்படுத்திக் கொண்ட நாட்களே இந்த 40 நாள் தவக்காலமாகக் கருதப்படுகிறது.

இந்த 40 நாட்களில், கிறிஸ்தவர்கள் நோன்பு, பிரார்த்தனை, தானம் மற்றும் சமூக சேவை போன்றவற்றில் ஈடுபட்டு, தங்களது வாழ்க்கையை ஆன்மிக ரீதியாக சீரமைத்து வருகின்றனர். பாவங்களை விட்டு விலகி, இறைவனிடம் மனமாற்றம் பெறும் காலமாக இந்த தவக்காலம் பார்க்கப்படுகிறது.

40 நாள் தவக்காலத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தவக்கால விரதத்தை தொடங்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்