🔥 12 ஆண்டுக்கு ஒருமுறை… வான் தேவர்களின் பார்வையில் நடந்த கும்பகோணம் மாசி மகம் பெருவிழா… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5794799 1772511971585 2 Thedalweb 12 ஆண்டுக்கு ஒருமுறை... வான் தேவர்களின் பார்வையில் நடந்த கும்பகோணம் மாசி மகம் பெருவிழா... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Mar 03, 2026 11:48 AM ISTKumbakonam Masi Magam 2026| பல்லாயிரக்கணககான பக்தர்கள் கலந்து கொண்டு மகாமக குளத்தில் புனித நீராடியும், கரைகளில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர் .+ மாசி மகம் கும்பகோணம்,உலக பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமக குளத்தில், நேற்று மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது

2
முன்னதாக சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் அஸ்திர தேவர்களுடன் ரிஷப வாகனங்களில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, அங்கு அஸ்திர தேவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி கரையில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்

3
கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Mar 03, 2026 11:48 AM ISTKumbakonam Masi Magam 2026| பல்லாயிரக்கணககான பக்தர்கள் கலந்து கொண்டு மகாமக குளத்தில் புனித நீராடியும், கரைகளில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர் .+ மாசி மகம்…


Last Updated:

Kumbakonam Masi Magam 2026| பல்லாயிரக்கணககான பக்தர்கள் கலந்து கொண்டு மகாமக குளத்தில் புனித நீராடியும், கரைகளில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர் .

+

மாசி

மாசி மகம் கும்பகோணம்,

உலக பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமக குளத்தில், நேற்று மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் அஸ்திர தேவர்களுடன் ரிஷப வாகனங்களில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, அங்கு அஸ்திர தேவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி கரையில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக பெருவிழா உலக பிரசித்தி பெற்றது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடைசியாக 2016ஆம் ஆண்டு நடைபெற்றது, அடுத்த மகாமகம் 2028ல் நடைபெறும். இதை தவிர்த்து, ஒவ்வொரு ஆண்டும் மாசி மக பெருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதே போல இவ்வாண்டு இவ்விழா கடந்த 21ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் காலை மாலை என இரு வேளைகளும் சுவாமி திருவீதியுலா நடைபெற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாசி மகத்துடன் கூடிய பௌர்ணமி நன்நாளில், காசி விசுவநாதர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், பாணபுரீஸ்வரர், நாகேஸ்வரர், திருக்கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், உள்ளிட்ட 12 சிவாலயங்களில் இருந்து மகாமக குளக்களத்தின் நான்கு கரைகளிலும், தனித்தனி ரிஷப வாகனங்களில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, அஸ்திர தேவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் என பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அஸ்திர தேவருடன் மகாமக குளத்தில் சிவாச்சாரியார் இறங்கி, மும்முறை முங்கி எழ, மாசி மக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மகாமக குளத்தில் புனித நீராடியும், கரைகளில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Sani peyarchi 10 2026 03 010dd60d8579732859998e7ec9f645c1 1200x675 Thedalweb Sani Peyarchi 2026 | சனியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு தலைகீழாக மாறப்போகுது வாழ்க்கை.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ Sani Peyarchi 2026 | சனியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு தலைகீழாக மாறப்போகுது வாழ்க்கை.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 துலாம்:உங்கள் ராசிக்கு நான்கு, ஐந்தாம் இடத்துக்கு உரியவரான சனிபகவான், இப்போதைய…

Shani Eclipse 2026 03 c1ec868476237d99b99a23637efe0e43 1200x675 Thedalweb Sani Blessings | சந்திர கிரகணத்தன்று சனியின் அருள்.. கோடீஸ்வரராகும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 Sani Blessings | சந்திர கிரகணத்தன்று சனியின் அருள்.. கோடீஸ்வரராகும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ராகுவும் கேதுவும் பாம்புகளைப் போலவே நிழல் கிரகங்களாகக் கருதப்படுகிறார்கள், அவற்றின்…