🚀 நாளை சனிப்பெயர்ச்சி விழா… திருநள்ளாறில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5797299 1772672454321 2 Thedalweb நாளை சனிப்பெயர்ச்சி விழா... திருநள்ளாறில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Mar 05, 2026 10:33 AM ISTஉலகப் புகழ்பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் மார்ச் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.+ சனீஸ்வர…


Last Updated:

உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் மார்ச் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

சனீஸ்வர

சனீஸ்வர ஆலயத்தில் பாதுகாப்பு ஒத்திகை பணி.

உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலில் மார்ச் 6ஆம் தேதி நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சனிப்பெயர்ச்சியை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய புதுச்சேரி அரசு பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆண்டின் சனிப்பெயர்ச்சியில், சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த அரிய தரிசனத்தை காண நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதனால் ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் கூடுதல் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ஒத்திகையில், கூட்ட நெரிசலின் போது பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடி முதலுதவி அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது. மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் அவசர மீட்பு படையினர் இணைந்து செயல்திறன் பயிற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், எள் தீபம் ஏற்றும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக கருதி தீயணைப்பு துறையினர் அவசர மீட்பு பயிற்சி மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, நளங்குளத்தில் புனித நீராடும் பக்தர்கள் நீரில் சிக்கியிருந்தால் படகு மூலம் மீட்டு மருத்துவ உதவி அளிக்கும் மீட்பு ஒத்திகையும் நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு பணித் திட்டங்களை மதிப்பாய்வு செய்தனர். பக்தர்கள் பாதுகாப்பாக சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Tortoise Vastu 2026 03 94c350dd4c3da8e353c300180b7ab0b3 1200x675 Thedalweb Tortoise | உங்க வீட்டில் ஆமை சிலை வைத்திருக்கிறீர்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Tortoise | உங்க வீட்டில் ஆமை சிலை வைத்திருக்கிறீர்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஆமையைக் கொண்டுவருவதற்கு இதுவே மிகவும் புனிதமான நாள் 2 வாஸ்து…

Tiruparankundram 2026 03 018d0e81c99485b98e18d9758c99f612 1200x675 Thedalweb திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை.. மதுரை உயர்நீதிமன்றம் வார்னிங்..!! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை.. மதுரை உயர்நீதிமன்றம் வார்னிங்..!! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Last Updated:Mar 05, 2026 7:27 AM ISTமலை மீதுள்ள தீபத்தூணில் 5 பேரை வழிபட நடத்த…