🚀 HBD Nassar: தமிழ் சினிமாவின் நடமாடும் நடிப்புப் பல்கலைக்கழகம்! | tamil actor Nassar Birthday special article

✍️ |
HBD Nassar: தமிழ் சினிமாவின் நடமாடும் நடிப்புப் பல்கலைக்கழகம்! | tamil actor Nassar Birthday special article
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இன்று மார்ச் 5, பிறந்தநாளைக் கொண்டாடும் நாசர், தமிழ் சினிமா மட்டுமன்றி இந்தியத் திரையுலகமே கொண்டாடும் ஒரு ஒப்பற்ற கலைஞர்

2
குணச்சித்திர நடிகர், வில்லன், நகைச்சுவைக் கலைஞர், இயக்குநர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் எனப் பன்முகத்தன்மை கொண்ட இவரது திரையுலகப் பயணம் பல சாதனைகளையும் நுணுக்கங்களையும் உள்ளடக்கியது.சினிமாவின் மீது கொண்ட தீராத காதலால், விமானப் படையில் பணியாற்றியதை விடுத்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் (SIFCC) திரைப்படக் கல்லூரியில் முறையாக நடிப்புப் பயின்றவர் நாசர்

3
1985-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான "கல்யாண அகதிகள்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
முறையான நடிப்புப் பயிற்சியும், நாடகப் பின்னணியும் அவரது அடித்தளத்தை வலுவாக்கின.நாசரின் நடிப்பு பாணி எந்தவொரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளும்

📌 இன்று மார்ச் 5, பிறந்தநாளைக் கொண்டாடும் நாசர், தமிழ் சினிமா மட்டுமன்றி இந்தியத் திரையுலகமே கொண்டாடும் ஒரு ஒப்பற்ற கலைஞர். குணச்சித்திர நடிகர், வில்லன், நகைச்சுவைக் கலைஞர், இயக்குநர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர்…


இன்று மார்ச் 5, பிறந்தநாளைக் கொண்டாடும் நாசர், தமிழ் சினிமா மட்டுமன்றி இந்தியத் திரையுலகமே கொண்டாடும் ஒரு ஒப்பற்ற கலைஞர். குணச்சித்திர நடிகர், வில்லன், நகைச்சுவைக் கலைஞர், இயக்குநர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் எனப் பன்முகத்தன்மை கொண்ட இவரது திரையுலகப் பயணம் பல சாதனைகளையும் நுணுக்கங்களையும் உள்ளடக்கியது.

சினிமாவின் மீது கொண்ட தீராத காதலால், விமானப் படையில் பணியாற்றியதை விடுத்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் (SIFCC) திரைப்படக் கல்லூரியில் முறையாக நடிப்புப் பயின்றவர் நாசர். 1985-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான “கல்யாண அகதிகள்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முறையான நடிப்புப் பயிற்சியும், நாடகப் பின்னணியும் அவரது அடித்தளத்தை வலுவாக்கின.

நாசரின் நடிப்பு பாணி எந்தவொரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளும் சுருங்கிவிடாதது. அவரது மிகப்பெரிய பலம் அவரது கணீரென்ற குரல். ‘தேவர் மகன்’ படத்தில் மாயாண்டியாக அவர் பேசும் வசனங்களும், ‘பாகுபலி’யில் பிங்கலதேவனாக வெளிப்படுத்தும் கரகரப்பான குரலும் அவரது குரல் நுட்பத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப தனது உடல் மொழியை மாற்றிக்கொள்வதிலும் அவர் வல்லவர். ‘அவதாரம்’ படத்தில் ஒரு தெருக்கூத்துக் கலைஞனின் உடல் மொழியையும், ‘இருவர்’ படத்தில் ஒரு அரசியல் தலைவரின் (அய்யா வேலுத்தம்பி) கம்பீரத்தையும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியிருப்பார். ‘குருதிப்புனல்’ படத்தில் ‘பத்ரி’ என்ற தீவிரவாதத் தலைவனாக, பெரிதாக வசனங்கள் பேசாமல் தனது கூர்மையான பார்வையாலேயே மிரட்டியிருப்பார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

அனுமி: ``நல்ல கதை இருந்தால் மட்டுமே..." - நடிகை பாவனா ஓபன் டாக்|Anumi: ``Only if there is a good story..." - Actress Bhavana Open Talk

🚀 அனுமி: “நல்ல கதை இருந்தால் மட்டுமே…” – நடிகை பாவனா ஓபன் டாக்|Anumi: “Only if there is a good story…” – Actress Bhavana Open Talk

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஒரு வழக்கைத் துப்பறியும் நிஜமான கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு,…

Vowels: "1980-களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம்; சான்ஸ் கிடைக்காது, ஆனால் இன்று.!"- சின்னி ஜெயந்த் | chinni jayanath speech at vowels movie press meet

📌 Vowels: “1980-களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம்; சான்ஸ் கிடைக்காது, ஆனால் இன்று.!”- சின்னி ஜெயந்த் | chinni jayanath speech at vowels movie press meet

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ராஜு ஷெரேகர் தயாரிப்பில் ஐந்து கதைகளை கொண்டு உருவாகி உள்ள…

காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது..." - கவிஞர் சாரதி |வரித்துணையே 6

💡 காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது…" – கவிஞர் சாரதி |வரித்துணையே 6

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப்…