💡 Arasan: சிலம்பரசனுடன் மோதும் விஜய் சேதுபதி; இரண்டு ஹீரோயின்கள், 2வது கட்ட ஷூட்டிங், STR-51 அப்டேட் . silambrasan’s movie arasan and str51 movie exclusive updates

✍️ |
Arasan: சிலம்பரசனுடன் மோதும் விஜய் சேதுபதி; இரண்டு ஹீரோயின்கள், 2வது கட்ட ஷூட்டிங், STR-51 அப்டேட் . silambrasan's movie arasan and str51 movie exclusive updates
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அடுத்தகட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்த்தனர்

2
ஆனால், இன்னமும் தொடங்கப்படவில்லை

3
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.'அரசன்' படப்பிடிப்புக்குக் கிளம்ப வெற்றிமாறனும், சிலம்பரசனும் ரெடியாக உள்ளனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால், விஜய்சேதுபதியின் தேதிகள் அமையவில்லை

5
அவர் இப்போது 'ஜெயிலர் 2', 'ஸ்லம் டாக் 33 டேம்பிள் ரோடு', பாலாஜி தரணிதரன் இயக்கும் படம் எனப் பிசியாக இருக்கிறார்

📌 அடுத்தகட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இன்னமும் தொடங்கப்படவில்லை. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.’அரசன்’ படப்பிடிப்புக்குக் கிளம்ப வெற்றிமாறனும், சிலம்பரசனும் ரெடியாக உள்ளனர். ஆனால், விஜய்சேதுபதியின் தேதிகள் அமையவில்லை. அவர் இப்போது…


அடுத்தகட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இன்னமும் தொடங்கப்படவில்லை. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.

‘அரசன்’ படப்பிடிப்புக்குக் கிளம்ப வெற்றிமாறனும், சிலம்பரசனும் ரெடியாக உள்ளனர். ஆனால், விஜய்சேதுபதியின் தேதிகள் அமையவில்லை. அவர் இப்போது ‘ஜெயிலர் 2’, ‘ஸ்லம் டாக் 33 டேம்பிள் ரோடு’, பாலாஜி தரணிதரன் இயக்கும் படம் எனப் பிசியாக இருக்கிறார். இதனால் அவரது கால்ஷீட்டிற்காகக் காத்திருந்தனர்.

இந்நிலையில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு சென்னையில் தொடர்கிறது. இந்த ஷெட்யூலில் சிலம்பரசன் விஜய்சேதுபதியுடன் மோதும் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. ஹீரோயினாக சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் தவிர படத்தில் இன்னொரு ஹீரோயினும் உண்டு என்கிறார்கள். அதாவது இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். மூன்றாவது ஷெட்யூலில் வேறொரு தோற்றத்திற்கு மாறுகிறார் சிலம்பரசன்.

அரசன் - விஜய் சேதுபதி

அரசன் – விஜய் சேதுபதி

இதற்கிடையே வரும் ஏப்ரலில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பிக்கும் ஐடியாவில் உள்ளார் சிலம்பரசன். ‘அரசன்’ படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்றும், முதல் ஷெட்யூலிலேயே வெற்றிமாறனின் குட்புக்கில் சிலம்பரசன் இடம்பிடித்து விட்டார் என்றும் சொல்கிறார்கள்.

தவிர, ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்திலும் நடிக்கப் போகிறார் சிலம்பரசன். இது குறித்த விவரங்கள் இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்