🚀 Astrology | வாக்கிய பஞ்சாங்கம் VS திருக்கணித பஞ்சாங்கம் – சனிப்பெயர்ச்சிக்கு எதை பின்பற்றலாம்.? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Sani peyarchi 1 2026 02 d1efc04069ef04597e4df9aa69082c5b 1200x675 Thedalweb Astrology | வாக்கிய பஞ்சாங்கம் VS திருக்கணித பஞ்சாங்கம் - சனிப்பெயர்ச்சிக்கு எதை பின்பற்றலாம்.? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது

2
பொதுவாக சூரிய உதயம் முதல் இரவு வரையிலான காலகட்டம் தான் ஒரு நாள் என்று கூறப்படுகிறது

3
அந்த நாளில் கோள்களின் நகர்வுகளைக் கொண்டும், கோள்கள் எப்படி சுழல்கின்றன என்பதைக் கொண்டும் கணிப்பதே பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.அப்படி ஒவ்வொரு கோயில்களும், ஒவ்வொரு நபர்களும், திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என ஒவ்வொன்றையும் கடைபிடிக்கின்றனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதில் எது சிறந்தது, எதை கடைபிடிப்பது சரியானதாக இருக்கும் என தெரியுமா

5
குறிப்பாக சனிப்பெயர்ச்சியில் எந்த பஞ்சாங்கப்படி சிறப்பாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.புகழ் பெற்ற திருக்கோயில்களான திருப்பதியில்

📌 நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக சூரிய உதயம் முதல் இரவு வரையிலான…


நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக சூரிய உதயம் முதல் இரவு வரையிலான காலகட்டம் தான் ஒரு நாள் என்று கூறப்படுகிறது. அந்த நாளில் கோள்களின் நகர்வுகளைக் கொண்டும், கோள்கள் எப்படி சுழல்கின்றன என்பதைக் கொண்டும் கணிப்பதே பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.

அப்படி ஒவ்வொரு கோயில்களும், ஒவ்வொரு நபர்களும், திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என ஒவ்வொன்றையும் கடைபிடிக்கின்றனர். இதில் எது சிறந்தது, எதை கடைபிடிப்பது சரியானதாக இருக்கும் என தெரியுமா? குறிப்பாக சனிப்பெயர்ச்சியில் எந்த பஞ்சாங்கப்படி சிறப்பாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

புகழ் பெற்ற திருக்கோயில்களான திருப்பதியில் திருக்கணிதம் பஞ்சாங்கம், திருநள்ளாறில் வாக்கிய பஞ்சாங்கம் பின்பற்றப்படும் ஆச்சர்யம் நடக்கிறது. இப்படி இருக்க மார்ச் மாதம் 6ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. நாம் இதை கடைபிடிக்க வேண்டுமா என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

வாக்கிய பஞ்சாங்கம் என்றால் என்ன?

சனிபகவானுக்கு சிறப்பு வாய்ந்த திருநள்ளாறு உள்ளிட்ட கோயில்களில் நடக்கும் திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் தான் இன்றளவும் நடத்தப்பட்டு வருகின்றன.

திருக்கணித பஞ்சாங்கம் என்றால் என்ன?

வாக்கிய பஞ்சாங்கம் தான் பழமையானது, திருக்கணிதம் புதியது என்ற எண்ணம் வேண்டாம். வாக்கிய பஞ்சாங்க முறை வருவதற்கு முன்னரே திருக்கணித பஞ்சாங்கம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

ஆரியபட்டா, பாஸ்கரா உள்ளிட்டோரின் காலத்திலேயே திருக்கணித பஞ்சாங்கம் நடைமுறையில் இருந்தது. ஆனால் அதை கணிக்க சற்று கடினமாக இருந்ததால், அதை எளிமையாக்கும் பொருட்டு வரருச்சி என்ற ஜோதிடர் வாக்கிய பஞ்சாங்கம் என பஞ்சாங்கத்தை எளிமைப்படுத்திக் கொடுத்தார். அவர் சூரிய சித்தாந்தம், ஆரிய சித்தாந்தத்தைக் கொடுத்தார். சூரிய சித்தாந்தம் வட இந்தியாவிலும், ஆரிய சித்தாந்தம் தென் பகுதியிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு சித்தாந்தங்களும் சில கால இடைவெளிக்கு இடையே கிரக நிலையை சரியாக மீண்டும் கணித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

பஞ்சாங்கத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்தில் காஞ்சி பெரியவர் ஒரே வார்த்தையில் சரியான தீர்வு சொல்லும் பொருட்டு, கோயில்களில் நடக்கும் அனுஷ்டானங்கள், நிகழ்வுகளுக்கு வாக்கிய பஞ்சாங்க முறைப்படியும், மனிதர்களுக்கு திருக்கணித பஞ்சாங்கத்தின் படியும் பின்பற்றுவது சரியானது என கூறி சென்றுள்ளார்.

பொறுப்பு துறப்பு:

மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் இணையத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் எழுதப்பட்டவையே. நியூஸ் 18 தமிழ்நாடு அதை உறுதிப்படுத்தவில்லை.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்