Autograph Re Release: “ரஜினி சாரிடம் எங்கள் சூழலை விளக்கினோம்!” – ‘திருப்பாச்சி’ பெஞ்சமின் பேட்டி | “We explained our situation to Rajini sir!” – Benjamin

✍️ |
Autograph Re Release: "ரஜினி சாரிடம் எங்கள் சூழலை விளக்கினோம்!" - 'திருப்பாச்சி' பெஞ்சமின் பேட்டி | "We explained our situation to Rajini sir!" - Benjamin


மழைக்காலத்தில் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டோம். படப்பிடிப்பு கடும் சிரமமாக இருந்தது. தினமும் மழை குறுக்கிட்டது.

படத்தின் முதல் பாதியில் வரும் என்னுடைய காட்சிகள் இரண்டு நாட்களில் முடிக்கப்பட வேண்டியவை, 15 நாட்களுக்கு மேல் படம்பிடிக்க வேண்டியதாயிற்று.

படப்பிடிப்பை தற்காலிகமாக தள்ளிப்போடச் சொல்லி பலரும் சேரனிடம் கூறியபோதும் அவர் விடாப்பிடியாக படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் சென்றார்.

தாமதமாகும் ஒவ்வொரு நாளும் பட்ஜெட் கூடிக்கொண்டே போனது. படத்தை அவரே தயாரித்ததால் அவருக்கு முடிவெடுப்பதில் சுதந்திரம் இருந்தது.

ஆட்டோகிராப் - பெஞ்சமின்

ஆட்டோகிராப் – பெஞ்சமின்

ஆனாலும், நொந்துபோய்விட்டார். கிளைமாக்ஸ் காட்சிக்கு பல மண்டபங்களில் இடம் கேட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை. பிறகு ரஜினி சாரை சந்தித்து சூழலை புரியவைத்தோம்.

அவர் எங்கள் சிரமங்களை புரிந்து கொண்டு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பணம் ஏதும் கொடுக்காமலே ஷூட் செய்துகொள்ள வாய்ப்பளித்தார். ஆனால், மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டும்.

சேரனிடம் அப்போது போதுமான பணம் இல்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து, மண்டபத்தின் மேனேஜர் சத்தம் போட ஆரம்பித்தார். நான்காவது நாள் மிகவும் கத்திவிட்டார்.

நாங்களும் சமாதானம் செய்ய முயற்சித்தோம், முடியவில்லை. ‘கரண்டு பில்லு கட்ட கூட காசில்லாம எதுக்கு படம் எடுக்குறீங்க’ என்று சேரன் சார் காதுபடவே சொல்லிவிட்டார். எங்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'கும்கி 2': "நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்வேன்"- பிரபு சாலமன்| direct prabu soloman on travel

‘கும்கி 2’: “நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்வேன்”- பிரபு சாலமன்| direct prabu soloman on travel

அவனுக்கு இந்த சமூகத்தால், மனிதர்களால், அரசியலால் வரும் பிரச்னைகளைத் தாண்டி தன்னுடைய நட்பை எப்படி ஒருவன் காப்பாற்றி கொள்கிறான்…