Bison: `` `பைசன்' படத்துக்காக என்னோட 100 சதவிகித உழைப்பைக் கொடுத்திருக்கேன்னு நம்புறேன்!" - துருவ் விக்ரம் | "I believe I’ve given my 100% effort for this film!" - Dhruv Vikram

Bison: “ `பைசன்’ படத்துக்காக என்னோட 100 சதவிகித உழைப்பைக் கொடுத்திருக்கேன்னு நம்புறேன்!” – துருவ் விக்ரம் | “I believe I’ve given my 100% effort for this film!” – Dhruv Vikram


ரஜிஷா விஜயன் பேசுகையில், “மாரி சார் கூட என்னோட செகண்ட் ஜர்னி. தமிழ்ல என்னை அறிமுகப்படுத்தியது மாரி சார்தான். கர்ணன்ல நடிச்சிருந்தேன், இப்போ `பைசன்’ படத்துல வந்திருக்கேன்.

நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். இது ஒரு அழகான படம். மேலும் சில சிறந்த மனிதர்களுடன், குறிப்பாக துருவ், அனுபமாவுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

படத்திற்குப் பிறகு எனக்கு நல்ல நண்பர்களாக அவங்க கிடைத்திருக்காங்க. பெரிய கிரெடிட்ஸ் மாரி சாருக்குதான். ரொம்ப முக்கியமான கதையை இவ்வளவு அன்போட பண்ணியிருக்காங்க.

அதுல ஒரு பகுதியாக இருப்பதற்கு எனக்கும் ஒரு லக் கிடைச்சிருக்கு. நம்ம ஒரு ஆக்டரா இருக்கும் பயணத்துல அவார்ட்ஸ் வந்திருக்கலாம். நிறைய பாராட்டுகள் வந்திருக்கலாம்.

ஒரு ஆர்டிஸ்ட்க்கு அதிகமான சந்தோஷம் கிடைக்கிறது இரண்டு விஷயத்துல, ஒன்று ஆடியன்ஸ் கொடுக்கிற லவ், அந்த அன்பு. அப்புறம் இரண்டாவது, டைரக்டர் ஓட நம்பிக்கை. ‘உங்களை நம்புறேன்’னு மாரி சார் என்னை மீண்டும் கூப்பிட்டிருக்கார்.

இந்த படத்துல என்னோட கேரக்டர் பற்றி சொல்ல முடியாது, ஆனா ரொம்ப முக்கியமான கேரக்டர்.” என்று முடித்துக் கொண்டார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *