அதனால்தான் அவரை அங்கீகரிக்கும் விதமாக தொடர்ந்து விக்ரம் இயங்கிக்கொண்டே, அவரின் நடிப்பை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். இதுவே அவரின் இந்த வெற்றி பயணத்திற்கான காரணமாக நான் எண்ணுகிறேன்.
அதேபோல பிறப்பினால் ஒருவருக்கு எந்த ஒரு கலையும் வந்து விடுவதில்லை. அவரின் திறமை, வசதி வாய்ப்புகளைக் கொண்டு அவர்கள் தனித்துவத்தை பெறுகின்றனர்.
துருவ் விக்ரம் திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் தோற்றம், அவரின் இருப்பு அருமையாக வந்திருக்கிறது. அவர் இந்தத் துறையில் வெகு தூரம் பயணிக்க போகிறார்.

அதே போல அனுபாமா, ரஜிஷா, பசுபதி போன்றோரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். முக்கியமாக, நிவாஸ் -க்கு இத்திரைப்படம் ஒரு புது துவக்கமாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
அம்பேத்கர் ஒருபோதும் மக்களை கைவிட்டதில்லை!
இந்திய சமூகத்தின் எல்லாப் பிரச்னைக்கும் தீர்வாக நான் கருதுவது அம்பேத்கரைதான். அம்பேத்கர் ஒருபோதும் இந்திய மக்களை கைவிட்டதில்லை.
மக்கள் அவருக்குத் கொடுத்த வெறுப்பை, வெறுப்பாக திருப்பி கொடுக்காமல் மக்களை நெறிப்படுத்தும் வாழ்வியல் முறைகளாக அவற்றை வடிவமைத்து கொடுத்தார்.
மேலும், அவரின் வழிகாட்டுதலின் பேரிலேயே இயங்குகிறேன் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ஜெய்பீம் ” என்றார்.