தொடர் ஏற்றத்தில் கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின் 7% மேலாக ஏற்றம்.. மற்ற கரன்சிகள் நிலவரம்..?

✍️ smurali35 |
bit11 1608 Thedalweb தொடர் ஏற்றத்தில் கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின் 7% மேலாக ஏற்றம்.. மற்ற கரன்சிகள் நிலவரம்..?
12 / 100 SEO Score

கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் சர்வதேச அளவிலான கிரிப்டோகளின் சந்தை மூலதன மதிப்பானது கடந்த அமர்வில் 189.26 லட்சம் கோடி ரூபாயாக அல்லது 1.87% அதிகரித்திருந்தது.   எனினும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்த கிரிப்டோ சந்தையின் மதிப்பானது 6,83,293 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. அதாவது 6.77% வீழ்ச்சியினை கண்டுள்ளது. கடந்த அமர்வில் 6 மாத உச்சத்தினை தொட்ட பிட்காயின் மதிப்பானது இன்று மீண்டும் உச்சத்தினை எட்டியுள்ளது. இது அமெரிக்க பங்கு சந்தை கட்டுபாட்டு வாரியம் பிட்காயின் இடிஎஃப் தொடங்கிய நிலையில், பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களிடையே மேலும் ஊக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

ஸ்டெல்லர் மதிப்பு

ஸ்டெல்லர் மதிப்பானது 2.83% அதிகரித்து, 0.380926 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.38 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.37 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 0.797482 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 196.42% ஏற்றம் கண்டுள்ளது.

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் மதிப்பானது 4.28% அதிகரித்து, 0.252591 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.26 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.24 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5,127.37% சரிவினைக் கண்டுள்ளது.

🔗 Share this post

smurali35

📚 Related Posts

No related posts found.