✅ Dharmendra: “எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்'' – ரஜினி, கமல், மம்மூட்டி.. லெஜண்ட்ஸ் இரங்கல்

✍️ |
Dharmendra: ``எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்''  - ரஜினி, கமல், மம்மூட்டி..  லெஜண்ட்ஸ் இரங்கல்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்

2
பிரதமர், மத்திய அமைச்சர்கள், பிராந்திய தலைவர்கள் முதல் திரையுலகின் பல தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர்கள் வரை அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்

3
தர்மேந்திராஅந்தவகையில் தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நடிகர் ரஜினிகாந்த், "விடைபெறுங்கள் நண்பரே

5
உங்கள் பொன்னான இதயத்தையும், நாம் பகிர்ந்து கொண்ட தருணங்களையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்

📌 பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். பிரதமர், மத்திய அமைச்சர்கள், பிராந்திய தலைவர்கள் முதல் திரையுலகின் பல தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர்கள் வரை அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். தர்மேந்திராஅந்தவகையில் தென்னிந்திய…


பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். பிரதமர், மத்திய அமைச்சர்கள், பிராந்திய தலைவர்கள் முதல் திரையுலகின் பல தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர்கள் வரை அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

dharmendrathuuuuu1762776400 Thedalweb Dharmendra: ``எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்'' - ரஜினி, கமல், மம்மூட்டி.. லெஜண்ட்ஸ் இரங்கல்
தர்மேந்திரா

அந்தவகையில் தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், “விடைபெறுங்கள் நண்பரே. உங்கள் பொன்னான இதயத்தையும், நாம் பகிர்ந்து கொண்ட தருணங்களையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். சாந்தியடையுங்கள், தரம் ஜி. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.” என எக்ஸ் தளத்தில் எழுதியிருந்தார்.

தர்மேந்திராவும் ரஜினிகாந்தும் Farishtay, Insaaf Kaun Karega ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஹேமமாலினி இணைந்து நடித்த அந்தா கானூன் படத்தில் தர்மேந்திரா கேமியோ ரோலில் நடித்திருப்பார்.

கமல்ஹாசன், “எனது அருமை நண்பரும், புகழ்பெற்ற நடிகருமான தர்மேந்திரா ஜி அவர்களின் மறைவால் மிகவும் வருத்தமுற்றேன். தரம் ஜி அவர்களின் வசீகரம், பணிவு மற்றும் மனோபலம் ஆகியவை திரையில் மட்டுமல்லாமல், திரைக்கு வெளியிலும் உண்மையானவை. இந்தியத் திரையுலகம் அதன் கனிவான பிம்பங்களில் ஒன்றை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என எழுதியிருக்கிறார்.

மலையாளம், தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த நட்சத்திரங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.





Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்