பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், “‘எனக்கென யாருமில்லையே’ பாடல் வந்தபோது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தேன். அந்தப் பாடல் 2014-ல் வெளியாகியிருந்தது.
சொல்லப்போனால், நான் என்னுடைய முன்னாள் காதலிக்குப் பாடி காண்பித்த முதல் பாடலும் அதுதான். நான் என்னுடைய பாடும் திறமையை அவளிடம் காண்பித்தேன்.
அந்த ஆடியோவை அவர் தன்னுடைய நண்பர்களுக்கும் காண்பித்தார். எனக்கும் அந்தப் பாடலுடன் நிறைய நினைவுகள் இருக்கின்றன. தொடர்ந்து பாடும் அளவுக்கு அது எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

விக்னேஷ் சிவன் சார் ‘LIK’ கதையை எனக்குச் சொல்லும்போது, ‘இந்த இடத்தில் இந்தப் பாடல் வரும்’ என்று சொன்னார்.
அதைக் கேட்டதும், இந்தப் படத்தில் நான் நடித்தே ஆக வேண்டும் என்று தோன்றிவிட்டது.
அந்தப் பாடலின் ஒரு பகுதியாக நான் இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ‘LIK’ படத்தில் நான் நடிக்க ஐந்து காரணங்கள் இருக்கின்றன.
அதில் ஒரு காரணம் இந்தப் பாடலும்தான். டீசரில் பாடல் இடம்பெற்ற பகுதி பெரிதும் வெற்றி பெறும் என்று நினைத்ததைப் போலவே, பலரும் அவ்வாறு உணர்ந்திருக்கின்றனர் என்பது எனக்குப் புரிந்தது,” என்றார்.