🔥 Happy New Year 2026: பனிமய மாதா கோவிலில் திரளான மக்கள் சிறப்பு வழிபாடு… | ஆன்மிகம்

✍️ |
HYP 5676563 cropped 01012026 160332 picsart 260101 160322377 w 2 3x2 Thedalweb Happy New Year 2026: பனிமய மாதா கோவிலில் திரளான மக்கள் சிறப்பு வழிபாடு... | ஆன்மிகம்
📌 Last Updated:Jan 01, 2026 5:14 PM ISTபுத்தாண்டை வரவேற்க தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.+ Happy New Year 2026: பனிமய மாதா கோவிலில்…


Last Updated:

புத்தாண்டை வரவேற்க தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

+
[ADSENSE-RESPONSIVE-UNIT]

Happy

Happy New Year 2026: பனிமய மாதா கோவிலில் திரளான மக்கள் சிறப்பு வழிபாடு…

புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆலய பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, கடந்த ஆண்டு முழுவதும் பாதுகாத்த இறைவனுக்கு நன்றி செலுத்தியும், பிறந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

புத்தாண்டை ஒட்டி பனிமய மாதா பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு திருப்பலியில் குடும்ப நலம், உடல்நலம், கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு, சமூக ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுடன் மக்கள் இறைவனை வழிபட்டனர். ஆலய வளாகம் முழுவதும் பக்தர்களின் திருப்பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகளால் ஆன்மிகச் சூழல் நிலவியது.

புத்தாண்டை வரவேற்கும் வகையில் மெழுகுவர்த்திகள் ஏந்தி மக்கள் அமைதியாக வழிபாட்டில் ஈடுபட்டனர். திருப்பலிக்குப் பின்னர் பக்தர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பாதுகாப்பு கருதி காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஆலயப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…