Kamal Haasan: “நான் `நாயகன்’ படத்துக்குள்ள வந்தது இப்படிதான்!” – நிழல்கள் ரவி | “This is how i get into Mani Ratnam’s Nayagan!” – Nizhalgal Ravi

✍️ |
Kamal Haasan: ``நான் `நாயகன்' படத்துக்குள்ள வந்தது இப்படிதான்!" - நிழல்கள் ரவி | ``This is how i get into Mani Ratnam's Nayagan!" - Nizhalgal Ravi


நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு `நாயகன்” ரீரிலீஸ் ட்ரீட் கிடைத்திருக்கிறது. அதிரடியான கொண்டாட்டத்துடன் நேற்றைய தினம் படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

மணிரத்னத்தின் கல்ட் க்ளாசிக் திரைப்படமான `நாயகன்’தான் இளையராஜாவின் 400-வது படம். `நாயகன்’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்று வேலு நாயக்கரின் மகன் சூர்யா.

அந்தப் பாத்திரம் தன் அப்பாவைப்போலவே ஆகவேண்டும் என்று சிறுவயதிலிருந்து ஆசைப்படும் சுவாரஸ்யமான கதாபாத்திரம்.

'நாயகன்' படப்பிடிப்பில்..

‘நாயகன்’ படப்பிடிப்பில்..

ரீரிலீஸை முன்னிட்டு சூர்யாவாக நடித்த நிழல்கள் ரவியோடு உரையாடினோம்.

`நாயகன்’ அனுபவங்களை விவரிக்கத் தொடங்கியவர், “காலத்தால் அழியாத காவியம் நாயகன். திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் பெரும் பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த படமது” என்றவர், “என்னுடைய முதல் படமான ‘நிழல்கள்’ படத்தின் முதல் ஷாட் ஆழ்வார்ப்பேட்டையில், கமல் சாரின் அறையில்தான் எடுக்கப்பட்டது.

கல்லூரி நாட்களில் நான் கமலின் தீவிர ரசிகன். அவரின் வீட்டில் என் முதல் படத்தின் படப்பிடிப்பு நடந்தது எனக்கு ஆச்சரியத்தையும் பெருமையையும் கொடுத்தது.

அதே கமல் அவர்களோடு இணைந்து ‘நாயகன்’ படத்தில் அவரின் மகனின் கதாபாத்திரத்தில் நடித்ததை மிராக்கில் என்றே கூறுவேன். கமல் நடிப்புலகின் சக்கரவர்த்தி. எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அசத்துவார். அவருக்கு மகனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம்” என்று பகிர்ந்தார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு…

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி…

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi's My Dear Sister first look released

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi’s My Dear Sister first look released

அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள…