கேள்வி: ஒரு சூப்பர் ஸ்டாராக சினிமாவில் வாழ்ந்துவிட்டு இப்போது ரேஸிங்கில் உதவியாளர்கள் இல்லாமல் நீங்களாகவே உங்கள் வேலைகளைச் செய்கிறீர்கள், சிறிய அறையில் உடை மற்றுகிறீர்கள், சமைக்கிறீர்கள், பெரிதாக இங்கு வசதிகள் இல்லை. வசதியாக வாழ்ந்துவிட்டு இப்போது எல்லாமே நீங்களாவே செய்துகொண்டிருப்பது எப்படி இருக்கிறது?
அஜித் குமார்: நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கால கட்டத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். அப்போது நானே என் வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். எந்தவொரு உதவியாளர்களும், வசதிகளும் எனக்கில்லை. வசதியான வாழ்க்கையெல்லாம் அதன்பிறகுதான் வந்தது.

என் வேலைகளைச் செய்ய எனக்கென்று உதயவியாளர்கள் வந்தபிறகு எனக்கு நேரம் மிச்சமானது. ஆனால் காலப்போக்கில் எல்லாவற்றிற்கும் அவர்களை நம்பியிருக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவீர்கள். அது ஆபாத்தானது.
இப்போது என் வேலைகளை நானே செய்துகொள்கிறேன், எல்லாவற்றையும் நானே செய்வதை ரசிக்கிறேன். உங்களைச் சுற்றி அதிகமானவர்கள் இருந்தால், வாழ்க்கை கடினமாகிவிடும். அதனால், முடிந்தவரை சுயமாக இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
இப்போது மீண்டும் எனது பால்ய காலத்திற்குச் சென்று எனது வாழ்க்கையை மீண்டும் இன்னொரு இடத்தில் இருந்து தொடங்குகிறேன். நானாக சமைத்துக் கொள்வது, நானே என் வேலைகளைப் பார்த்துக் கொள்வது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அது எனக்குப் பிடித்திருக்கிறது. மக்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் நானும் இருக்க ஆசைப்படுகிறேன்” என்று பேசியிருக்கிறார் அஜித்.

