⚡ Ramadan 2026 | நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம்.. தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
ramzan 2026 02 4f15f67656886565d103d15db108813d Thedalweb Ramadan 2026 | நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம்.. தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 18, 2026 8:25 PM ISTஇஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்றாக நோன்பு கருதப்படுகிறது

2
அதன்படி உலகம் எங்கும் வாழும் இஸ்லாமியர்கள் விடியற்காலை (ஃபஜ்ர்) முதல் சூரிய அஸ்தமனம் (மக்ரிப்) வரை நோன்பு இருந்து உணவு, தண்ணீர் மற்றும் பிற உடல் தேவைகளைத் தவிர்த்து ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கின்றனர்.News18நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இஸ்லாமிய காலண்டரில் 9வது மாதம் ரமலான் ஆகும்

3
இந்தப் புனித மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்பதால் ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளிலிருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிப்ரவரி

📌 Last Updated:Feb 18, 2026 8:25 PM ISTஇஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்றாக நோன்பு கருதப்படுகிறது. அதன்படி உலகம் எங்கும் வாழும் இஸ்லாமியர்கள் விடியற்காலை (ஃபஜ்ர்) முதல் சூரிய அஸ்தமனம் (மக்ரிப்) வரை நோன்பு இருந்து உணவு,…


Last Updated:

இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்றாக நோன்பு கருதப்படுகிறது. அதன்படி உலகம் எங்கும் வாழும் இஸ்லாமியர்கள் விடியற்காலை (ஃபஜ்ர்) முதல் சூரிய அஸ்தமனம் (மக்ரிப்) வரை நோன்பு இருந்து உணவு, தண்ணீர் மற்றும் பிற உடல் தேவைகளைத் தவிர்த்து ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கின்றனர்.

News18
News18

நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமிய காலண்டரில் 9வது மாதம் ரமலான் ஆகும். இந்தப் புனித மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்பதால் ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளிலிருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிப்ரவரி 17-ஆம் தேதி பிறை தென்பட்டதை அடுத்து, அங்கு இன்று முதல் நோன்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி ஜமா மஸ்ஜித் மற்றும் லக்னோவின் ஐஷ்பாக் இத்கா போன்ற முக்கிய இடங்களிலிருந்து தலைமை இமாம்கள் பிறை தென்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியாவைப் பொறுத்தவரை, இன்று (பிப்ரவரி 18 ஆம் தேதி) மாலை பிறை தென்பட்டதையடுத்து, நாளை முதல் நோன்பு கடைப்பிடிக்கலாம் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ரமலான் மாதம் சுமார் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். மார்ச் 20 அல்லது 21-ஆம் தேதி ஈகைத் திருநாள்(ரம்ஜான்) கொண்டாடப்பட வாய்ப்புள்ளது. இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் பகுதிக்குரிய துல்லியமான சஹர் மற்றும் இஃப்தார் நேரங்களை உள்ளூர் பள்ளிவாசல்கள் அல்லது கால அட்டவணைகள் மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்றாக நோன்பு கருதப்படுகிறது. அதன்படி உலகம் எங்கும் வாழும் இஸ்லாமியர்கள் விடியற்காலை (ஃபஜ்ர்) முதல் சூரிய அஸ்தமனம் (மக்ரிப்) வரை நோன்பு இருந்து உணவு, தண்ணீர் மற்றும் பிற உடல் தேவைகளைத் தவிர்த்து ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கின்றனர். இது சுய ஒழுக்கம், ஏழைகளின் பசியை உணர்தல் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கான காலமாகும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்