💡 Sabarimalai | இன்று மாலை சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.. படையெடுக்கும் பக்தர்கள்! | ஆன்மிகம்

✍️ |
Magara jothi sabarimalai 2026 01 72f495717573ede147bf64dd32a08504 3x2 Thedalweb Sabarimalai | இன்று மாலை சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.. படையெடுக்கும் பக்தர்கள்! | ஆன்மிகம்
📌 Last Updated:Jan 14, 2026 7:22 AM ISTSabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசனம் இன்று, 30,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.சபரிமலை மகர ஜோதிசபரிமலை ஐயப்பன் கோயிலின்,…


Last Updated:

Sabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசனம் இன்று, 30,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை மகர ஜோதி
சபரிமலை மகர ஜோதி

சபரிமலை ஐயப்பன் கோயிலின், முக்கிய நிகழ்வான மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறும் நிலையில், 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில், நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. 41 கால மண்டல காலத்துக்குப் பின் டிசம்பர் 27 ஆம் தேதி நடை அடைக்கப்பட்டது, பின்னர் மகர விளக்கு உற்சவத்துக்காக டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்நிலையில், மகரசங்கராந்தி தினமான இன்று மகரவிளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. பகல் 2.45 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, 3 மணி அளவில் மகர சங்கராந்தி பூஜைகள் நடைபெறுகின்றன. பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணப் பெட்டி மாலை 6 மணியளவில் சந்நிதானத்தை அடைகிறது. தொடர்ந்து திருவாரபணங்கள் சாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெறும்.

அதன்பின்னர், சில விநாடிகளில் பொன்னம்பல மேட்டில், சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

மகர ஜோதியை காண 30,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் குறிப்பிட்ட இடங்களில் இருந்து மட்டுமே மகர ஜோதியை தரிசிக்க வேண்டும் எனவும், காட்டுப் பகுதிக்குள் செல்லக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Shani Eclipse 2026 03 c1ec868476237d99b99a23637efe0e43 1200x675 Thedalweb Sani Blessings | சந்திர கிரகணத்தன்று சனியின் அருள்.. கோடீஸ்வரராகும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Sani Blessings | சந்திர கிரகணத்தன்று சனியின் அருள்.. கோடீஸ்வரராகும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ராகுவும் கேதுவும் பாம்புகளைப் போலவே நிழல் கிரகங்களாகக் கருதப்படுகிறார்கள், அவற்றின்…

Vinayagar 6 2026 03 b4e8e0841e9105fa028c32ed1cc4b794 1200x675 Thedalweb Today Rasi Palan | சந்திரகிரகண நாளில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் இவைதான்.. இன்றைய ராசிபலன்.. மார்ச் 3, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 Today Rasi Palan | சந்திரகிரகண நாளில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் இவைதான்.. இன்றைய ராசிபலன்.. மார்ச் 3, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிம்மம்சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான நாள்…