💡 Sabarimalai | பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்ட திருவாபரணங்கள்.. நாளை சபரிமலை சென்றடையும்..! | ஆன்மிகம்

✍️ |
Sabarimalai thiruvabaranam 2026 01 df187bde1a4aba653818b08e46472f63 3x2 Thedalweb Sabarimalai | பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்ட திருவாபரணங்கள்.. நாளை சபரிமலை சென்றடையும்..! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 13, 2026 7:27 AM ISTSabarimalai | நேற்று மதியம் புறப்பட்ட திருவாபரணங்கள் நாளை மாலை சபரிமலை வந்தடையும்.சபரிமலை திருவாபரணம்மகரவிளக்கு நாளில், ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது.உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து 18 படி ஏறி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்

2
கடந்த கார்த்திகை மாதம் பூஜை முடிந்த நிலையில் மகர விளக்கு பூஜை காலம் நடைபெற்று வருகிறது.தற்போது இந்த மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது

3
பந்தளத்திலிருந்து திருவாபரண பவனி நேற்று மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பந்தளம் அரண்மனையில் உள்ள திருவாபரணங்கள் நேற்று அதிகாலை முதல் பந்தளம் சாஸ்தா கோயிலில் பக்தர்களின்

📌 Last Updated:Jan 13, 2026 7:27 AM ISTSabarimalai | நேற்று மதியம் புறப்பட்ட திருவாபரணங்கள் நாளை மாலை சபரிமலை வந்தடையும்.சபரிமலை திருவாபரணம்மகரவிளக்கு நாளில், ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது.உலக புகழ்பெற்ற…


Last Updated:

Sabarimalai | நேற்று மதியம் புறப்பட்ட திருவாபரணங்கள் நாளை மாலை சபரிமலை வந்தடையும்.

சபரிமலை திருவாபரணம்
சபரிமலை திருவாபரணம்

மகரவிளக்கு நாளில், ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது.

உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து 18 படி ஏறி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். கடந்த கார்த்திகை மாதம் பூஜை முடிந்த நிலையில் மகர விளக்கு பூஜை காலம் நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. பந்தளத்திலிருந்து திருவாபரண பவனி நேற்று மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டது. பந்தளம் அரண்மனையில் உள்ள திருவாபரணங்கள் நேற்று அதிகாலை முதல் பந்தளம் சாஸ்தா கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. பகல் 12:30 மணிக்கு உச்ச பூஜை நடைபெற்று, பேடகங்கள் அடைக்கப்பட்டு தலை சுமடாக பவனியாக புறப்பட்டது.

இது நாளை 14ம் தேதி மாலை சன்னிதானம் வந்தடையும். மகரஜோதிக்கு முன்னோடியாக சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறும் சுத்தி கிரியைகள் நேற்றே தொடங்கப்பட்டது. தொடர்ந்து இன்று மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக பிம்பசுத்தி பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்