📌 Sabarimalai | மகர விளக்கு பூஜை.. சபரிமலையில் குவியும் கூட்டம்.. கட்டுப்பாடுகளை கடுமையாக்க திட்டம்! | ஆன்மிகம்

✍️ |
sabarimala 2025 12 5872e4618fc1e025955cc865f1b7b1c7 3x2 Thedalweb Sabarimalai | மகர விளக்கு பூஜை.. சபரிமலையில் குவியும் கூட்டம்.. கட்டுப்பாடுகளை கடுமையாக்க திட்டம்! | ஆன்மிகம்
📌 Last Updated:Jan 10, 2026 7:36 AM ISTSabarimalai | சபரிமலை மகரவிளக்கு உற்சவத்தில் கூட்டம் அதிகரிப்பதால், சன்னிதானம் காவலர்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளனர்.சபரிமலைசபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக சில கட்டுப்பாடுகளை விதிப்பதுடன், ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளை…


Last Updated:

Sabarimalai | சபரிமலை மகரவிளக்கு உற்சவத்தில் கூட்டம் அதிகரிப்பதால், சன்னிதானம் காவலர்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளனர்.

சபரிமலை
சபரிமலை

சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக சில கட்டுப்பாடுகளை விதிப்பதுடன், ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும் சன்னிதானம் காவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

மகரவிளக்கு உற்சவ காலம் நிறைவடைய சில நாட்களே உள்ளதால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எருமேலியில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மலையேறும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த பிறகும் இரண்டு நாட்கள் வரை சன்னிதானத்திலேயே தங்குவதால், சன்னிதானத்தில் கூட்டம் அதிகரித்திருப்பதுடன், புதிதாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் மலையேறி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

18-ம் படி ஏறுவதற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதால் பம்பையிலேயே காவலர்கள் தடுத்து நிறுத்தி அனுப்பி வருகின்றனர். மகரவிளக்கு நாளான ஜனவரி 14 அன்று நேரடி முன் பதிவு மற்றும் ஆன்லைன் மூலம் 30 ஆயிரம் பேர் என மொத்தம் 35,000 பேர் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி 19-ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்