⚡ Sabarimalai | வரப்போகிறது சபரிமலை மண்டல பூஜை.. 23ஆம் தேதி தங்க அங்கி ஊர்வலம் புறப்பாடு! | ஆன்மிகம்

✍️ |
sabarimalai 2 2025 11 556838877916068d13e698c8b0d2ff97 3x2 Thedalweb Sabarimalai | வரப்போகிறது சபரிமலை மண்டல பூஜை.. 23ஆம் தேதி தங்க அங்கி ஊர்வலம் புறப்பாடு! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 11, 2025 2:23 PM ISTSabarimalai | பிரசித்திப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம்  2026  (ஜனவரி) 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயில்சபரிமலையில் மண்டல பூஜைக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் வரும் 23ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது

2
கோவிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வரும் டிசம்பர் 27-ந் தேதி  நடக்கிறது

3
இந்த பூஜையின்போது, திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை நடத்தப்படுவது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:December 11, 2025 2:23 PM ISTSabarimalai | பிரசித்திப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம்  2026  (ஜனவரி) 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயில்சபரிமலையில் மண்டல பூஜைக்கு ஐயப்பனுக்கு…


Last Updated:

Sabarimalai | பிரசித்திப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம்  2026  (ஜனவரி) 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலையில் மண்டல பூஜைக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் வரும் 23ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. கோவிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வரும் டிசம்பர் 27-ந் தேதி  நடக்கிறது. இந்த பூஜையின்போது, திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டம் ஆறன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சபரிமலையில் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி தங்க அங்கி 23-ந் தேதி காலை 7 மணிக்கு ஆறன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக சபரிமலை நோக்கி எடுத்து செல்லப்பட உள்ளது. அன்று இரவு ஓமல்லூரிலும், 24-ந் தேதி இரவு கோந்நியிலும், 25-ந் தேதி பெரிநாட்டிலும் ஊர்வலம் இரவில் தங்கிய பின்னர் ஊர்வலம் 26-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவிலில் வந்து சேரும்.

அங்கிருந்து தங்க அங்கியை மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்வார்கள். அன்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் அதனை 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பெற்றுக் கொள்வார். தொடர்ந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். இதையடுத்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படுவதையொட்டி 26-ந் தேதி பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தங்க அங்கி அணிவித்து நடைபெறும் தீபாராதனைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மறுநாள் 27-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை நடைபெறும். தொடர்ந்து 5 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பிறகு தங்க அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் அய்யப்பனுக்கு மண்டல சிறப்பு பூஜை நடைபெறும். தொடர்ந்து  27ஆம் தேதி பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். 3 நாட்கள் ஓய்வுக்கு பிறகு மகர விளக்கு பூஜைகளுக்காக  கோவில் நடை மீண்டும் டிசம்பர் 30- ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பிரசித்திப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம்  2026  (ஜனவரி) 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

god 1 2026 01 bdb7e8e8bc272c65dc1308f0cfc1b0b0 Thedalweb புதன்-சுக்கிரன் கிரக போர்... இந்த ராசிகள் எச்சரிக்கையா இருக்கணுமாம்.. உங்க ராசி இருக்கானு பாருங்க! | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ புதன்-சுக்கிரன் கிரக போர்… இந்த ராசிகள் எச்சரிக்கையா இருக்கணுமாம்.. உங்க ராசி இருக்கானு பாருங்க! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Jan 25, 2026 11:57 AM ISTஜோதிடக் கணிப்பின்…

god 2026 01 f7121a9b850a1688a292e159ac187776 Thedalweb திருவோண நட்சத்திரத்தில் இணையும் 4 கிரகங்கள்... அதிர்ஷ்ட மழையும் நனைய போகும் ராசிகள்! | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ திருவோண நட்சத்திரத்தில் இணையும் 4 கிரகங்கள்… அதிர்ஷ்ட மழையும் நனைய போகும் ராசிகள்! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரிஷபம்: திருவோண நட்சத்திரத்தில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய நான்கு…