Shriya Saran: “இந்த எண் என்னுடையது அல்ல” – நடிகை ஸ்ரேயா சரண் விளக்கம் | Shriya Saran: “This number is not mine” – actress Shriya explains

✍️ |
Shriya Saran: ``இந்த எண் என்னுடையது அல்ல" - நடிகை ஸ்ரேயா சரண் விளக்கம் | Shriya Saran: ``This number is not mine'' - actress Shriya explains


தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரன். ஷ்ரியா ஆண்ட்ரி கோஷீ என்பவரைத் திருமணம் செய்துகொண்டதற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். இந்தத் தம்பதிக்கு ராதா என்ற மகள் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா சரன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று, ஸ்ரேயா போலவே அவருக்கு நெருக்கமானவர்களின் பேசிவருவதாகவும், அவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்த முட்டாள் யார்? தயவுசெய்து இப்படி போலியாக மெசேஜ் செய்து நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள்! மக்களின் நேரத்தை வீணடிப்பதில் நான் வருத்தப்படுகிறேன். இந்தச் சம்பவம் துரதிஷ்டவசமானது.

இந்த எண் என்னுடையது அல்ல. இந்த நபர் என்னைப் போல, என்னுடன் பணி செய்ய விரும்பும் நபர்களிடம் பேசுகிறார். இப்படியான செயல்களில் உங்கள் நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? ஆள்மாறாட்டக்காரராக இல்லாமல், ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்குங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' - சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' – சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு…

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' – நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா…