🚀 Sorgavasal | பெருமாள் கோயில்களில் மட்டும் சொர்க்கவாசல் திறப்பது ஏன்? பின்னணியில் உள்ள காரணம் இதுதான்! | ஆன்மிகம்

✍️ |
Sorgavasal 2025 12 63d76e7ffe1e3dbe395de2fb345d9187 3x2 Thedalweb Sorgavasal | பெருமாள் கோயில்களில் மட்டும் சொர்க்கவாசல் திறப்பது ஏன்? பின்னணியில் உள்ள காரணம் இதுதான்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் சிறந்த ஒன்றாக விளங்குகிறது

2
அதனால் தான், "மார்கழி மாத ஏகாதசி விரதம் இருந்து என்னை வழிபடும் அனைவருக்கும் யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கோள்வோம்" என்று பகவான் மஹாவிஷ்ணு அருளியிருக்கிறார்

3
பகவத் கீதையிலும் கிருஷ்ணபரமாத்மா, மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன், என்று கூறியிருக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதன் காரணமாகவே, மார்கழி மாத ஏகாதசி விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.மார்கழி மாதத்தில் வரக்கூடிய மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

5
ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள்

📌 வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. அதனால் தான், “மார்கழி மாத ஏகாதசி விரதம் இருந்து என்னை வழிபடும் அனைவருக்கும் யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கோள்வோம்” என்று பகவான் மஹாவிஷ்ணு அருளியிருக்கிறார்….


வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. அதனால் தான், “மார்கழி மாத ஏகாதசி விரதம் இருந்து என்னை வழிபடும் அனைவருக்கும் யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கோள்வோம்” என்று பகவான் மஹாவிஷ்ணு அருளியிருக்கிறார். பகவத் கீதையிலும் கிருஷ்ணபரமாத்மா, மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன், என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாகவே, மார்கழி மாத ஏகாதசி விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மார்கழி மாதத்தில் வரக்கூடிய மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். இந்த விரதத்தின் மூலமாக தவறே செய்தாலும், திருமாலின் அருள் இருந்தால் சொர்க்கம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சொர்க்கவாசல் திறப்பு கதை:

திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றியவர் பிரம்மா. அவருக்குப் படைக்கும் தொழில் வழங்கப்பட்டது. ஒருமுறை, திருமாலிடம் பேசிய பிரம்மா, எனக்கு வேலைப்பளு அதிகமாகி விட்டது; படைத்து படைத்து கை ஓய்ந்து விட்டது. என்று பெருமை அடிக்கும் விதத்தில் கூறினார். இதன் மூலம், திருமாலைக் காட்டிலும் தானே உயர்ந்தவன் என்ற கருத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியதாக புராணங்களில் கூறப்படுகிறது. இந்த நிகழ்வே, பின்னர் நிகழவிருந்த முக்கிய சம்பவங்களுக்கு அடித்தளமாக அமைந்ததாக ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகின்றன.

இதனைத் தொடர்ந்து, பிரம்மனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று திருமால் எண்ணினார். அதற்காக, மது மற்றும் கைடபர் எனப்படும் இரு அரக்கர்களை உருவாக்கி, பிரம்மனைத் தொந்தரவு செய்யுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டார் என புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. திருமாலின் உத்தரவின்படி செயல்பட்ட அந்த அரக்கர்கள், படைப்பிற்கு ஆதாரமான வேதங்களை பறித்து, படைப்பு செயலுக்குப் பயன்படுத்தப்படும் கலன்களை அழித்தனர். மேலும், பிரம்மாவை பல்வேறு வழிகளில் தொந்தரவு செய்து, படைப்புப் பணியை முடங்கச் செய்தனர் என்றும் கூறப்படுகிறது.

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திருமாலிடம் ஓடினார், பிரம்மா. ‘ஐயனே! என் நிலைமையை பாருங்கள் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்னை காப்பாற்றுங்கள் என்று கதறியுள்ளார். ‘ஆக, நீ சாதாரண ஆள் என்பதைப் புரிந்து கொண்டாயா.? பிரம்மனே! நாலு தலை இருக்கிறது என்பதற்காக, நான்கிலும் கர்வத்தை ஏற்றிக் கொள்ளக்கூடாது. எவ்வளவு உயர்ந்த பணியாக இருந்தாலும் சரி, வேலைப்பளு என்றெல்லாம் ஒதுங்கக்கூடாது. கொடுக்கப்பட்ட பணியை இஷ்டத்துடன் செய்தால், அந்தப்பணி எளிதாக இருக்கும் என்று அறிவுரை கூறி அரக்கர்களை அழைத்து அவர்களின் அகந்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

புராணங்களின்படி, வைகுண்டத்திற்குச் சென்றவர்கள் மீண்டும் திரும்ப இயலாது. மேலும், புண்ணியவான்கள் மட்டுமே வைகுண்டத்தின் கிழக்குவாசல் வழியாக நுழைய அனுமதி பெறுவர். ஆனால் மது, கைடபர் ஆகியோர் பாவச் செயல்களில் ஈடுபட்ட அரக்கர்களாக இருந்ததால், அந்த வாயில் வழியாக அவர்களை அழைத்துச் செல்ல முடியாத நிலை உருவானது. இதனை கருத்தில் கொண்டு, பகவான் திருமால் வைகுண்டத்தின் வடக்கு திசையில் ஒரு தனி வாசலை உருவாக்கினார். அந்த வாசல் வழியாக வெளியே வந்த திருமால், மது மற்றும் கைடபரை தம்முடன் இழுத்துச் சென்றதாக புராணக் கதைகள் கூறுகின்றன. இந்த வடக்கு வாசலே பின்னாளில் “சொர்க்கவாசல்” என அழைக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான், ஏகாதசி நாளில் திறக்கப்படும் சொர்க்கவாசலை தரிசிப்பது, புண்ணிய பலன் அளிக்கும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

மது, கைடபரை வைகுண்டத்துக்குள் இழுத்துச் சென்றது போல, நம்மையும் இறைவன் தன் கருணையால் வைகுண்டத்துக்குள் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற வேண்டுதலுடன் தான், பக்தர்கள் சொர்க்கவாசல் முன் நின்று பெருமாளை வழிபடுகின்றனர்.

விரதம் இருக்கும் முறை:

ஏகாதசி நாளன்று அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, பூஜை செய்து, பகவான் மஹாவிஷ்ணுவின் மந்திரங்களை சொல்லி விரதம் இருந்து வரவேண்டும். பகல் வேளையிலும் தூங்காமல் விழித்திருந்து விரதமிருக்க வேண்டும். ஏகாதசி நாளன்று, முடிந்தவரை, முழுமையாக விரதமிருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் குடிக்கலாம். பசி உணர்வு ஏற்பட்டால் ஏழு முறை துளசி இலையையும் துளசி தீர்த்தத்தையும் சாப்பிட்டு வரலாம்.

நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், நெய், பழங்கள், காய்கனிகள், வேர்க்கடலை, பால், தயிர் போன்றவற்றை முதலில் பகவானுக்கு படைத்துவிட்டு பிறகு சாப்பிடலாம். ஏகாதசி விரதத்தை எப்படி முறைப்படி தொடங்குகிறோமோ அதே போல் விரதத்தை முறைப்படி தான் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஏகாதசி விரதம் இருந்ததற்கான பலன் கிடைக்காமல் போய்விடும் எனவே இன்றைய தினம் முறையோடு விரதம் இருந்து நாளை துவாதசி நாளில் விரதம் முடிந்து அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டக்காய் சாப்பிட்டு பெருமாளை தரிசனம் செய்யலாம்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…