சிம்பு - வெற்றிமாறன் முதல் திரைப்பட டைட்டில் - அரசன்!|Simbu - Vetrimaaran First movie title Asuran

STR: ‘அரசன்’ சிலம்பரசனுடன் இணையும் நடிகர்கள்; அனிருத் பிறந்தநாளில் வெளிவரும் அப்டேட்; ஜெட் வேகத்தில் டீம் | Arasan: Kannada actor to team up with Simbu; New update on Anirudh’s birthday; Film crew at jet speed


தமிழ் சினிமாவில் இப்போதைய “அரசன்’ சிலம்பரசன்தான். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘எஸ்.டி.ஆர். 49’க்கு ‘அரசன்’ என தலைப்பு வைத்துள்ளனர்.

இன்னொரு பக்கம் அஷ்வத் மாரிமுத்துவின் படத்திலும் நடிக்க உள்ளார். ஒரே சமயத்தில் இரண்டு படங்களிலும் ஜெட் வேகத்தில் சீறிப்பாயப் போகிறது என்ற தகவலும் வருகிறது.

அரசன் போஸ்டர்

அரசன் போஸ்டர்

‘அரசன்’ படத்தின் புரோமோவின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. இளமையான சிம்புவும், 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு கெட்டப்பில் அவர் நடித்துள்ளார்.

வட சென்னை பின்னணியில் உருவாகும் கதை இது. சமுத்திரக்கனி, கிஷோர் இவர்களுடன் இயக்குநர் நெல்சன் எனப் பலரும் நடித்துள்ளனர். இரண்டு ஷெட்யூல்களாக நடந்த இந்தப் புரொமோ ஷூட்டின் முதல் ஷெட்யூல் சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம் ஒன்றில் நடந்தது.

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

இரண்டு நாள்கள் நடந்த அதன் படப்பிடிப்பில் சிம்பு, இயக்குநர் நெல்சன் மற்றும் ஏராளமான துணை நடிகர்கள் பங்கேற்றனர். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் சிம்பு நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன. வளசரவாக்கம் பகுதியில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கினார்கள். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வரும் அக்டோபர் 16ம் தேதி அனிருத்தின் பிறந்தநாளில் ‘அரசன்’ படத்தின் புரொமோ வீடியோ வெளியாகிறது என்கிறார்கள்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *