📌 Thai Poosam | தைப்பூசம் 2026 எப்போது தெரியுமா? குழந்தை வரம் கிடைக்க இப்படி விரதம் இருங்க..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
thaipoosam viratham 2026 01 b509abb284551a5d19d85de4d4a9e721 Thedalweb Thai Poosam | தைப்பூசம் 2026 எப்போது தெரியுமா? குழந்தை வரம் கிடைக்க இப்படி விரதம் இருங்க..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 21, 2026 12:28 PM ISTThai pusam | முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசம் வரவுள்ள நிலையில் இன்று முதல் விரதம் தொடங்குகிறது.தைப்பூசம் விரதம்தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரக்கூடிய நன்னாளாகும்

2
இந்த நாளில்தான், அன்னை தன் தவப்புதல்வனுக்கு வேல் வழங்கிய நாளாக கருதப்படுகிறது.தமிழ் கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான்

3
முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களுள் தைப்பூசமும் ஒன்றாகும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தை மாதம் என்றால் பொங்கல் பண்டிகை எவ்வளவு சிறப்போ அதுபோல தைப்பூசமும் மிகவும் சிறப்பானது

5
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்

📌 Last Updated:Jan 21, 2026 12:28 PM ISTThai pusam | முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசம் வரவுள்ள நிலையில் இன்று முதல் விரதம் தொடங்குகிறது.தைப்பூசம் விரதம்தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும்…


Last Updated:

Thai pusam | முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசம் வரவுள்ள நிலையில் இன்று முதல் விரதம் தொடங்குகிறது.

தைப்பூசம் விரதம்
தைப்பூசம் விரதம்

தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரக்கூடிய நன்னாளாகும். இந்த நாளில்தான், அன்னை தன் தவப்புதல்வனுக்கு வேல் வழங்கிய நாளாக கருதப்படுகிறது.

தமிழ் கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களுள் தைப்பூசமும் ஒன்றாகும். தை மாதம் என்றால் பொங்கல் பண்டிகை எவ்வளவு சிறப்போ அதுபோல தைப்பூசமும் மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் பிப்ரவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக முருக பக்தர்கள் முழு மூச்சில் தயாராகி வருகின்றனர். தைப்பூசமானது ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழாவாக முருகப் பக்தர்களால் கொண்டாடப்படும்.

அந்த 10 நாட்கள் விரதம் இன்று முதல் தொடங்குகிறது. இன்று முதல் 10 நாட்கள் வரை விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். 10ஆம் நாள் இறுதியான பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம். தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு நாளும் உனை மறவாத பிரியாத வரம் வேண்டும் என்று கேட்டு பெறலாம்.

முருகனை வழிபடும் சமயத்தில் வேல் வழிபாடு செய்வது நல்லது. முடிந்தால் காலை மாலை என இருவேளையும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம். இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும். மேலும் குழந்தை வரம் வேண்டும் தம்பதிகளும் இந்த விரதத்தை மேற்கொண்டால் நல்லது நடக்கும் என்று சொல்லப்படுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

astrology 2026 03 82c872665eb1a1c5124d400fc83cb1af 1200x675 Thedalweb Astrology | இந்த 7 ராசிக்கார பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பார்களாம்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Astrology | இந்த 7 ராசிக்கார பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பார்களாம்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கடகம்:கடக ராசிக்கார பெண்கள் மற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும், அனைத்திற்கும் வளைந்து…

1772863847 chanakya 2026 03 9abb2aa5f6ec4f522898fd12c0ef86e5 1200x675 Thedalweb Chanakya Niti | பணம் சம்பாதிக்கும் முன்பு கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்.. சாணக்கியர் வழங்கும் அறிவுரை..! | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Chanakya Niti | பணம் சம்பாதிக்கும் முன்பு கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்.. சாணக்கியர் வழங்கும் அறிவுரை..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நாம் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி வாழாமல், சரியான சிந்தனை, ஒழுக்கம்…

personality test 2026 03 218868ce14c032aa734f6d6830f0f865 1200x675 Thedalweb Personality Traits | நீங்கள் தூங்கும் நிலையே உங்க ஆளுமை சொல்லும்.. உங்க குணாதிசயங்கள் என்ன தெரிஞ்சுக்கோங்க! | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Personality Traits | நீங்கள் தூங்கும் நிலையே உங்க ஆளுமை சொல்லும்.. உங்க குணாதிசயங்கள் என்ன தெரிஞ்சுக்கோங்க! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஒரு சாய்த்து தூங்கும் நிலை:நீங்கள் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில்…