✅ Thai Poosam | நாளை தைப்பூசம்.. முருகனின் அருள் கிடைக்க கட்டாயம் இதை செய்யுங்க.. விரத முறைகள் மற்றும் பலன்கள்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
thaipoosam 1 2026 01 32eb6c06e22b330ac05605b25a5a8274 Thedalweb Thai Poosam | நாளை தைப்பூசம்.. முருகனின் அருள் கிடைக்க கட்டாயம் இதை செய்யுங்க.. விரத முறைகள் மற்றும் பலன்கள்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 31, 2026 12:40 PM ISTThaipusam | தைப்பூசம் அன்று முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபடுவதால் நினைத்தது நடக்கும், தொட்டது துலங்கும் என்பது நம்பிக்கை.தைப்பூசம் 2026தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்த நாட்களின் தைப்பூசமும் ஒன்று

2
இந்த நாளில் முருகனை நினைத்து விரதம் மேற்கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.தை மாத பெளர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் தைப்பூச பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்

3
இந்த ஆண்டு பிப்ரவரி 01ம் தேதியான நாளை ஞாயிற்றுக்கிழமை தைப்பூச பெருவிழா கொண்டாடப்பட உள்ளது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த ஆண்டு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலேயே அமைந்துள்ளதால் விரதம் இருந்து வழிபடவும், கோவிலுக்கு சென்று முருகனை தரிசிக்கவும் வசதியாக இருக்கும்.முருகப் பெருமான், அன்னை பராசக்தியிடம்

📌 Last Updated:Jan 31, 2026 12:40 PM ISTThaipusam | தைப்பூசம் அன்று முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபடுவதால் நினைத்தது நடக்கும், தொட்டது துலங்கும் என்பது நம்பிக்கை.தைப்பூசம் 2026தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்த நாட்களின் தைப்பூசமும்…


Last Updated:

Thaipusam | தைப்பூசம் அன்று முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபடுவதால் நினைத்தது நடக்கும், தொட்டது துலங்கும் என்பது நம்பிக்கை.

தைப்பூசம் 2026
தைப்பூசம் 2026

தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்த நாட்களின் தைப்பூசமும் ஒன்று. இந்த நாளில் முருகனை நினைத்து விரதம் மேற்கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தை மாத பெளர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் தைப்பூச பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பிப்ரவரி 01ம் தேதியான நாளை ஞாயிற்றுக்கிழமை தைப்பூச பெருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலேயே அமைந்துள்ளதால் விரதம் இருந்து வழிபடவும், கோவிலுக்கு சென்று முருகனை தரிசிக்கவும் வசதியாக இருக்கும்.

முருகப் பெருமான், அன்னை பராசக்தியிடம் இருந்து வேல் வாங்கிய தினத்தையே நாம் தைப்பூச பெருவிழாவாக கொண்டாடுகிறோம். தைப்பூசம் அன்று முருகனை மனதார வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. தைப்பூசம் அன்று பலரும் விரதம் இருந்து வழிபடுவார்கள். சிலர் 48 நாட்கள், 21 நாட்கள் என்றும் தைப்பூச விரதம் இருப்பார்கள். ஆனால் அனைவராலும் இப்படி 48 நாட்கள் விரதம் கடைபிடிக்க முடியாது. ஒரு நாள் விரதம் மேற்கொண்டாலும் நல்லதுதான்.

27 நட்சத்திரங்களில், பூசம் நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பவர், குரு பகவான். எனவே, தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு குரு பகவானின் அருளும் சேர்ந்து கிட்டும். தைப்பூச நாளில் தொட்டது துலங்கும் என்பார்கள். எனவே அன்றைய தினம், குழந்தைகளுக்கு காது குத்துதல், ஏடு தொடங்குதல், திருமணப் பேச்சுக்கள், புதிய தொழில் ஒப்பந்தம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். தைப்பூசத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கும், தீராத பகை மாறும், ஒற்றுமை அதிகரிக்கும், தொடங்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விரத முறைகள்:

தைப்பூசம் அன்று நாள் முழுவதும் உணவை தவிர்த்து உபவாசமாக விரதம் இருக்கலாம். முழு உபவாசமாக இருக்க முடியாதவர்கள் உப்பு சேர்க்காத எளிய உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அல்லது பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு தைப்பூச விரதம் இருக்கலாம்.

பால் குடமாகவோ அல்லது பால் காவடியாகவோ எடுத்துச் சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்யலாம். முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட காவடிகள் சுமந்து சென்று வழிபடலாம். அப்படி காவடி எடுப்பவர்கள் குறைந்தபட்சம் 5 நாட்களாவது விரதம் இருப்பது நல்லது.

தைப்பூசம் அன்று அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக் கொள்ளலாம்.

இது எதுவும் முடியாதவர்கள் வீட்டில் இருந்த படியே விரதம் இருக்கலாம். அன்றைய தினம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து முருக நாமங்களை மட்டுமே ஜபித்த படி, தியானம் செய்யலாம். கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் உள்ளிட்டவற்றை உச்சரிக்கலாம்.

தமிழ் செய்திகள்/ஆன்மிகம்/

Thai Poosam | நாளை தைப்பூசம்.. முருகனின் அருள் கிடைக்க கட்டாயம் இதை செய்யுங்க.. விரத முறைகள் மற்றும் பலன்கள்!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5736412 cropped 31012026 102908 maruthamalaimurugantemple5 1 Thedalweb Thaipusam Traffic Change: ஜன.31 முதல் பிப்.2 வரை போக்குவரத்து மாற்றம்… மருதமலை செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு... | தமிழ்நாடு போட்டோகேலரி

🚀 Thaipusam Traffic Change: ஜன.31 முதல் பிப்.2 வரை போக்குவரத்து மாற்றம்… மருதமலை செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு… | தமிழ்நாடு போட்டோகேலரி

📌 வாகனங்கள் நிறுத்துமிடங்கள்: மருதமலைக் கோயிலுக்கு காா்கள் மூலம் வருவோா் பாரதியாா் பல்கலைக்கழக குடியிருப்பு வளாகம், அரசு சட்டக்…

HYP 5735789 cropped 30012026 202014 picsart 260130 200250138 w 1 Thedalweb பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ சேவை... மத நல்லினக்கத்தை காட்டிய இஸ்லாமியர்கள்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🚀 பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ சேவை… மத நல்லினக்கத்தை காட்டிய இஸ்லாமியர்கள்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Last Updated:Jan 31, 2026 9:44 AM ISTதிண்டுக்கல் சாலையில் பாதயாத்திரையாக நடந்து வரும் முருக பக்தர்களுக்கு…