✅ Thaipoosam | தைப்பூச திருவிழா கோலாகலம்.. முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை.. பக்தர்கள் பரவசம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Thaipusam 2026 02 4f161efca49f90843e6f35dc6cddc32f Thedalweb Thaipoosam | தைப்பூச திருவிழா கோலாகலம்.. முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை.. பக்தர்கள் பரவசம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 02, 2026 7:35 AM ISTதைப்பூச திருவிழாவையொட்டி பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, திருச்செந்தூர், சுவாமிமலை, மருதமலை, சென்னிமலை, வடபழனி கோயில்களில் லட்சக்கணக்கானோர் பக்தி பரவசத்தில் கலந்து கொண்டனர்.தைப்பூசம்தைப்பூச திருவிழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன

2
பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.தைப்பூச விழாவுக்கு புகழ்பெற்ற 3ஆம் படை வீடான பழனி முருகன் கோயிலில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்

3
காவடி எடுத்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆடினர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துக்குமாரசாமி- வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார்

5
அரோகரா என கோஷமிட்டப்படி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன

📌 Last Updated:Feb 02, 2026 7:35 AM ISTதைப்பூச திருவிழாவையொட்டி பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, திருச்செந்தூர், சுவாமிமலை, மருதமலை, சென்னிமலை, வடபழனி கோயில்களில் லட்சக்கணக்கானோர் பக்தி பரவசத்தில் கலந்து கொண்டனர்.தைப்பூசம்தைப்பூச திருவிழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன்…


Last Updated:

தைப்பூச திருவிழாவையொட்டி பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, திருச்செந்தூர், சுவாமிமலை, மருதமலை, சென்னிமலை, வடபழனி கோயில்களில் லட்சக்கணக்கானோர் பக்தி பரவசத்தில் கலந்து கொண்டனர்.

தைப்பூசம்
தைப்பூசம்

தைப்பூச திருவிழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச விழாவுக்கு புகழ்பெற்ற 3ஆம் படை வீடான பழனி முருகன் கோயிலில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். காவடி எடுத்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆடினர். வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துக்குமாரசாமி- வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். அரோகரா என கோஷமிட்டப்படி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் விரதமிருந்து பாத யாத்திரையாகவும், பால்குடம் மற்றும் காவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி காணும் இடமெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, பாத யாத்திரையாக பக்தர்கள் வந்தனர். கடலில் குளித்துவிட்டு அவர்கள் சாமியை வழிபட்டனர். கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. வைரவேலுடன் காட்சியளிக்கும் முருகனை பக்தர்கள் தரிசித்தனர்.

கோவை மாவட்டம் மருதமலை கோவிலுக்கு ஜமாபாத் வாத்தியம் இசைத்தும் பால் காவடி எடுத்து வந்தும் முருகப்பெருமானை வழிபட்டனர். கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய புகழ்பெற்ற சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. சென்னை வடபழனியில் தைப்பூச திருவிழாவையொட்டி பலமணி நேரம் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…