📌 Tirupati | காணும் பொங்கல்.. திருப்பதி மலையில் வேடுபறி உற்சவம் கோலாகலம்! | ஆன்மிகம்

✍️ |
Tirupati 2026 01 cb7b0fee293ee7bb91dbcc4922352cda 3x2 Thedalweb Tirupati | காணும் பொங்கல்.. திருப்பதி மலையில் வேடுபறி உற்சவம் கோலாகலம்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 17, 2026 7:20 AM ISTTirupati Vedupari | திருப்பதி மலையில் பார்வேட்டை வேடுபறி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

2
மலையப்ப சுவாமி, கிருஷ்ணர் ஊர்வலமாக பார்வேட்டை மண்டபம் சென்றனர்.திருப்பதிகாணும் பொங்கலையொட்டி திருப்பதி மலையில் பார்வேட்டை என்ற பெயரில் வேடுபறி உற்சவம் நடைபெற்றது.வேடுபறி உற்சவத்தை முன்னிட்டு பஞ்ச ஆயுதங்களை தரித்து உற்சவர் மலையப்ப சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டார்.அவருடன் கிருஷ்ணர் மற்றொரு திருவாச்சியில் எழுந்தருளி புறப்பட்டார்

3
ஏழுமலையான் கோயிலில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பார்வேட்டை மண்டபத்தை உற்சவர்கள் ஊர்வலமாக அடைந்தனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பின்னர், அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.இதையடுத்து, மலையப்ப சுவாமி அங்குள்ள வனப்பகுதியில் மூன்று முறை முன்னும் பின்னுமாக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் கோயில்

📌 Last Updated:Jan 17, 2026 7:20 AM ISTTirupati Vedupari | திருப்பதி மலையில் பார்வேட்டை வேடுபறி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மலையப்ப சுவாமி, கிருஷ்ணர் ஊர்வலமாக பார்வேட்டை மண்டபம் சென்றனர்.திருப்பதிகாணும் பொங்கலையொட்டி திருப்பதி மலையில் பார்வேட்டை…


Last Updated:

Tirupati Vedupari | திருப்பதி மலையில் பார்வேட்டை வேடுபறி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மலையப்ப சுவாமி, கிருஷ்ணர் ஊர்வலமாக பார்வேட்டை மண்டபம் சென்றனர்.

திருப்பதி
திருப்பதி

காணும் பொங்கலையொட்டி திருப்பதி மலையில் பார்வேட்டை என்ற பெயரில் வேடுபறி உற்சவம் நடைபெற்றது.

வேடுபறி உற்சவத்தை முன்னிட்டு பஞ்ச ஆயுதங்களை தரித்து உற்சவர் மலையப்ப சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டார்.அவருடன் கிருஷ்ணர் மற்றொரு திருவாச்சியில் எழுந்தருளி புறப்பட்டார். ஏழுமலையான் கோயிலில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பார்வேட்டை மண்டபத்தை உற்சவர்கள் ஊர்வலமாக அடைந்தனர். பின்னர், அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, மலையப்ப சுவாமி அங்குள்ள வனப்பகுதியில் மூன்று முறை முன்னும் பின்னுமாக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் கோயில் அர்ச்சகர் வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொய் மான், புலி ஆகிய பொம்மைகள் மீது வெள்ளி வேல் ஒன்றை வீசி எறிந்தார். இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் பின்னர், உற்சவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலை அடைந்தனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்