✅ ‘நாயகன்’ ரீரிலீஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு | Madras High Court Says No to Ban on Nayagan Re-Release

✍️ |
‘நாயகன்’ ரீரிலீஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு | Madras High Court Says No to Ban on Nayagan Re-Release
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சென்னை: ‘நாயகன்’ திரைப்படத்தின் ரீரிலிஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது

2
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்' திரைப்படம், நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது

3
இந்த நிலையில், எஸ்ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர்.ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்தொடர்ந்துள்ள வழக்கில், ‘நடிகர் கமல்ஹாசன், சரண்யா உள்ளிட்டோர் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்தை எனது நிறுவனம், ஏடிஎம் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து படத்தை வெளியிடும் உரிமையை கடந்த 2023-ல் பெற்றுள்ளது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதை மறைத்து, வி.எஸ்

5
ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ‘நாயகன்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது

📌 சென்னை: ‘நாயகன்’ திரைப்படத்தின் ரீரிலிஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படம், நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், எஸ்ஆர் ஃபிலிம்…


சென்னை: ‘நாயகன்’ திரைப்படத்தின் ரீரிலிஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படம், நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எஸ்ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர்.ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்தொடர்ந்துள்ள வழக்கில், ‘நடிகர் கமல்ஹாசன், சரண்யா உள்ளிட்டோர் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்தை எனது நிறுவனம், ஏடிஎம் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து படத்தை வெளியிடும் உரிமையை கடந்த 2023-ல் பெற்றுள்ளது.

இதை மறைத்து, வி.எஸ். ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ‘நாயகன்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இது முறைகேடான நடவடிக்கையாகும். எனவே, ‘நாயகன்’ திரைப்படத்தை மறு வெளியீடு செய்யப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும். மறு வெளியீடு மூலம் வசூலான தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வி.எஸ். இன்டர் நேஷனல் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ‘படத்தை மறு வெளியீடு செய்ய அதிகாரபூர்வமான ஒப்பந்தம் எங்களிடம் உள்ளது. காப்புரிமை சட்டம் எதுவும் மீறப்படவில்லை’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, படத்தை வெளியிட தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382482' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

என்னமோ ஏதோ: ''குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!'' - மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13

💡 என்னமோ ஏதோ: ”குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!” – மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த வரி அனைவருக்குமே புரியுமா, இயக்குநர் இதனை ஏற்றுக் கொள்வாரா…

ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

💡 ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்" பாடலும், கிளைமாக்ஸ் பாடலும்…

"நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!"- அபிஷேக் பச்சன் |"Later I realized I was looking at it the wrong way!" - Abhishek Bachchan

🔥 “நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!”- அபிஷேக் பச்சன் |”Later I realized I was looking at it the wrong way!” – Abhishek Bachchan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவர், “நாம் விமர்சனங்களை தவறாகப் புரிந்துகொள்கிறோம் 2 அதை எதிர்மறையான…