✅ வேகமெடுக்கும் ‘வேட்டுவம்’, ஏப்ரலில் வானம் விழா; மெருகேறும் `சார்பட்டா 2′- பா.ரஞ்சித் பரபர அப்டேட்ஸ்! | pa.ranjith’s vettuvam movie and his line up updates exclusively

✍️ |
வேகமெடுக்கும் 'வேட்டுவம்', ஏப்ரலில் வானம் விழா; மெருகேறும் `சார்பட்டா 2'- பா.ரஞ்சித் பரபர அப்டேட்ஸ்! | pa.ranjith's vettuvam movie and his line up updates exclusively
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
"தங்கலான்' படத்தை அடுத்து பா.ரஞ்சித்தின் அடுத்த அதிரடியான 'வேட்டுவம்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன

2
ஆனாலும் இன்னும் சில நாள்கள் படப்பிடிப்பு உள்ளது என்றும் சொல்கிறார்கள்

3
இதற்கிடையே 'சார்பட்டா பரம்பரை 2'வும் விரைவில் டேக் ஆஃப் ஆகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்நிலையில் 'வேட்டுவம்' அப்டேட் குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள்..

5
ரஞ்சித்தின் கனவு படைப்பு 'வேட்டுவம்'

📌 “தங்கலான்’ படத்தை அடுத்து பா.ரஞ்சித்தின் அடுத்த அதிரடியான ‘வேட்டுவம்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஆனாலும் இன்னும் சில நாள்கள் படப்பிடிப்பு உள்ளது என்றும் சொல்கிறார்கள். இதற்கிடையே ‘சார்பட்டா பரம்பரை 2’வும் விரைவில்…


“தங்கலான்’ படத்தை அடுத்து பா.ரஞ்சித்தின் அடுத்த அதிரடியான ‘வேட்டுவம்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஆனாலும் இன்னும் சில நாள்கள் படப்பிடிப்பு உள்ளது என்றும் சொல்கிறார்கள். இதற்கிடையே ‘சார்பட்டா பரம்பரை 2’வும் விரைவில் டேக் ஆஃப் ஆகிறது. இந்நிலையில் ‘வேட்டுவம்’ அப்டேட் குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள்…

ரஞ்சித்தின் கனவு படைப்பு ‘வேட்டுவம்’. அதனால்தான் கடந்த 2022ல் 75 வது கான் திரைப்பட விழாவில் ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். அதில் புலி ஒன்றின் ஓவியமும் இடம்பெற்றிருந்தது. அதன் பின் நடிகர்கள் பற்றிய விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ‘வேட்டுவம்’ படப்பிடிப்பை ஆரம்பித்தார் பா.ரஞ்சித்.

இந்தப் படத்தில் ஆர்யா, ‘அட்டகத்தி’ தினேஷ், குரு சோமசுந்தரம், கலையரசன், ஷபீர், ஜான் விஜய், மைம் கோபி, லிஸி ஆண்டனி, லிங்கேஷ், சாய் தீனா என பலரும் நடிக்கின்றனர். கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடிக்கிறார். இதற்கு முன் ‘பொன்னியின் செல்வ’னில் வானதியாக நடித்தவர். இந்த படத்திலிருந்து அவரது பழைய டீம் இல்லை. ‘பாட்டல் ராதா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘தங்கலா’னுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் ஹீரோ தினேஷின் ஹேர் ஸ்டைலும், தோற்றமும் வைரலானது. ஆர்யாவின் கட்டுறுதியான தோற்றமும் பேசப்பட்டது. அதிரடியாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது.

முதற்கட்ட படப்பிடிப்பை காரைக்குடியில் தொடங்கிய ரஞ்சித், அதன்பின் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கும்பகோணம் என பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார். ரஞ்சித்தின் படங்களில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக ‘வேட்டுவம்’ இருக்கும் என்கிறார்கள். சயன்ஸ் ஃபிக்ஷன், ஃப்யூச்சரிஸ்டிக் டிராமா ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தாலும் இன்னும் சில நாள்கள் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பு இருக்கிறது என்கிறார்கள். படத்தை ஜூலை கொண்டு வர முயற்சிகள் நடக்கிறது. இதற்கிடையே வரும் ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடுகின்றனர். ‘வானம் கலைவிழா’ சென்னையில் நடக்கிறது. கூகை இயக்கம் சார்பில் நடத்தப்படும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது. இதில் பி.கே. ஃபிலிம் பெஸ்டிவல் 2026க்கான திரையிடல்களும் நடக்கிறது. ஆக, ஏப்ரலில் ரஞ்சித்தின் கவனம் இதில் இருக்கும் என்கிறார்கள்.

அதைப் போல 40 படங்களை தாண்டிவிட்ட ஆர்யாவின் திரைப்பயணத்தில் ‘சார்பட்டா பரம்பரை’க்கு பிறகு ‘வேட்டுவ’மும் அவரை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் படமாக இருக்கும் என்ற பேச்சும் இருக்கிறது. ‘சார்பட்டா பரம்பரை 2’வின் திரைக்கதையை தமிழ் பிரபாவும் இணைந்து எழுதி வருகிறார். ஆர்யாவிற்கு அடுத்து திரைக்கு வரும் படமாக ‘மிஸ்டர் எக்ஸ்’ உள்ளது. ‘எஃப்.ஐ.ஆர்’ மனு ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். உளவாளி நிறுவனம் ஒன்றில் நடக்கும் கதை இது. இதனை அடுத்து அவர் ‘அனந்தன் காடு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!" - 'காஷ்மீர் பைல்ஸ்' இயக்குநர் |"What must be told with honesty and courage!" — 'The Kashmir Files' Director

🚀 “நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!” – ‘காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநர் |”What must be told with honesty and courage!” — ‘The Kashmir Files’ Director

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் புஷன் குமார் கூறியதாவது, "சில கதைகளை…

"கென் மட்டும்தான் அந்த விஷயத்தை நேர்மறையாகப் பார்த்தாரு! - 'யூத்' பப்ளூ |"Ken was the only one who viewed that matter positively!" — 'Youth' Pablu

💡 “கென் மட்டும்தான் அந்த விஷயத்தை நேர்மறையாகப் பார்த்தாரு! – ‘யூத்’ பப்ளூ |”Ken was the only one who viewed that matter positively!” — ‘Youth’ Pablu

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தொடர்ந்து பேசிய அவர், "சிவகார்த்திகேயன் சார் மூலமாகத்தான் நான் சினிமாவுக்கு…

"விஜய் சேதுபதி அண்ணனுடைய குணம்தான் அவரை இந்த இடத்துக்கு கூட்டி வந்திருக்கு!" - வடிவேல் முருகன் |"It is Vijay Sethupathi Anna's character that has brought him to where he is today!" — Vadivel Murugan

📌 “விஜய் சேதுபதி அண்ணனுடைய குணம்தான் அவரை இந்த இடத்துக்கு கூட்டி வந்திருக்கு!” – வடிவேல் முருகன் |”It is Vijay Sethupathi Anna’s character that has brought him to where he is today!” — Vadivel Murugan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 வடிவேல் முருகன் பேசுகையில், "சின்ன வயசுல இருந்தே சினிமா பைத்தியம்…