🚀 Angammal: "அங்கம்மாளாக மாற நேர்மை தேவைப்பட்டுச்சு!" – கீதா கைலாசம்

✍️ |
Angammal: "அங்கம்மாளாக மாற நேர்மை தேவைப்பட்டுச்சு!" - கீதா கைலாசம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'

2
விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள 'அங்கம்மாள்' படத்தை என்ஜாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர்

3
கீதா கைலாசமும், சரண் சக்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கீதா கைலாசம் – சரண் சக்தி தவிர பரணி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர்

5
டிசம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகயிருக்கிறது

📌 பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘அங்கம்மாள்’ படத்தை என்ஜாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய்…


பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’.

விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘அங்கம்மாள்’ படத்தை என்ஜாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர்.

கீதா கைலாசமும், சரண் சக்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

கீதா கைலாசம் - சரண் சக்தி
கீதா கைலாசம் – சரண் சக்தி

தவிர பரணி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

டிசம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (டிசம்பர் 2) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கீதா கைலாசம், “’அங்கம்மாள்’ கதாபாத்திரமாக மாறுவதற்கு பயமில்லாத நேர்மை தேவைப்பட்டது. அவளுடைய மௌனத்திற்கும், பெருமைக்கும், இதயத்துடிப்புக்கும் முழுமையாக சரணடைய வேண்டியிருந்தது.

கிராமத்தில் படமாக்கியதால் ஒவ்வொரு ஃபிரேமிலும் நான் நடிக்கும் முறையே மாறியது. இந்தக் கதையை இவ்வளவு உணர்திறனுடன் வடிவமைத்த இயக்குநர் விபினுக்கு நன்றி.

ரிகர்சல் மூலம் அல்லாமல் அந்த கதாபாத்திரத்தை நான் உணர்ந்து நடிக்க அனுமதித்தார். சரண் சக்தி மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் இந்தக் கதையை உண்மையாக உணர வைத்தது.

கீதா கைலாசம் - பரணி
கீதா கைலாசம் – பரணி

இந்தப் படம் வெளியானதும் பரணியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். படப்பிடிப்பில் நாங்கள் அனைவரும் மிகவும் சின்சியராக நடித்தோம்.

இந்தப் படம் எங்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் நிச்சயம் புது அனுபவத்தையும் ஒரு தலைமுறையின் வலிமையையும் எடுத்து சொல்லும்” என்று பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``ஏ.ஆர் ரஹ்மான் நன்றிக்குறியவர்" - எம்.பி கனிமொழியின் பதிவு வைரல்! | "A.R. Rahman is a grateful person" - MP Kanimozhi's post goes viral!

🔥 “ஏ.ஆர் ரஹ்மான் நன்றிக்குறியவர்” – எம்.பி கனிமொழியின் பதிவு வைரல்! | “A.R. Rahman is a grateful person” – MP Kanimozhi’s post goes viral!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட்…

ஒரே விழாவில் 34 புது இயக்குநர்கள்; ஒளிப்பதிவாளர் செழியனின் புதுமுயற்சி; பங்கேற்கும் பிரபலங்கள்! | cinematographer chizhiyan launches 34 new film directors in his film school function

🚀 ஒரே விழாவில் 34 புது இயக்குநர்கள்; ஒளிப்பதிவாளர் செழியனின் புதுமுயற்சி; பங்கேற்கும் பிரபலங்கள்! | cinematographer chizhiyan launches 34 new film directors in his film school function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சனி, ஞாயிறுகள்லதான் வகுப்புகள் நடைபெறும் 2 வெளிநாடுகள்ல இருந்தும், பணிபுரிவோரும்…

``சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன" - தஸ்லிமா நஸ்ரீன் |"Difficulties befall only poor and ordinary people like me," - Taslima Nasrin.

🚀 “சிரமங்கள் என்னைப் போன்ற ஏழை எளியவர்களுக்குத்தான் நேர்கின்றன” – தஸ்லிமா நஸ்ரீன் |”Difficulties befall only poor and ordinary people like me,” – Taslima Nasrin.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட்…