✅ "13 வருடங்களுக்கு முன் தனுஷ் சாருடன் வந்தேன்; முதல் வரிசையில் உட்கார எனக்கு..!" – சிவகார்த்திகேயன்

✍️ |
"ஒவ்வொரு வருஷம் எனக்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது"- சிவகார்த்திகேயன்| “Every year, my responsibilities keep increasing” – Sivakarthikeyan.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
70-வது தென்னிந்திய Filmfare Awards South விருது விழா கேரளாவில் நடைபெற்று வருகிறது

2
இந்த விருது விழாவில் சிவகார்த்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 8 விருதுகளைக் குவித்திருக்கிறது

3
இந்த விழாவில் விருதை பெற்ற பிறகு மேடையில் சிவகார்த்திகேயன் பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சிவகார்த்திகேயன் – தனுஷ் விருது குறித்து பேசிய சிவகார்த்திகேயன், "இந்த Filmfare விருது தான் எனது முதல் விருது

5
13 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக இந்த விழாவுக்கு தனுஷ் சாருடன் தான் வந்தேன்

📌 70-வது தென்னிந்திய Filmfare Awards South விருது விழா கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் சிவகார்த்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட…


70-வது தென்னிந்திய Filmfare Awards South விருது விழா கேரளாவில் நடைபெற்று வருகிறது.

இந்த விருது விழாவில் சிவகார்த்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 8 விருதுகளைக் குவித்திருக்கிறது.

இந்த விழாவில் விருதை பெற்ற பிறகு மேடையில் சிவகார்த்திகேயன் பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

சிவகார்த்திகேயன் - தனுஷ்
சிவகார்த்திகேயன் – தனுஷ்

விருது குறித்து பேசிய சிவகார்த்திகேயன், “இந்த Filmfare விருது தான் எனது முதல் விருது. 13 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக இந்த விழாவுக்கு தனுஷ் சாருடன் தான் வந்தேன்.

அவர் தான் ‘சும்மா வா… ஜாலியாக போயிட்டு வரலாம்’ என்று என்னை அழைத்து வந்தார். அப்போது எனக்கு இரண்டாவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது.

இன்று முதல் வரிசையில் உட்கார்ந்து இந்த விருதை வாங்க 13 ஆண்டுகள் இருக்கிறது.

‘அமரன்’ படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது ‘அமரன் எனக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும்’ என்று சொன்னேன். அதேபோல இந்த படம் இன்னும் எனக்கு விருதுகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.

அதற்கு காரணமான முகுந்த் வரதராஜன் சாரின் குடும்பத்தினருக்கு நன்றி. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி.

இந்த படத்திற்காக நான் கமல்ஹாசன் சாரின் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கிருந்த எக்கச்சக்கமான Filmfare விருதுகளை பார்த்தேன்.

அமரன்
அமரன்

அப்போது ‘அமரனுக்காக எனக்கும் கிடைக்கும்’ என்று நினைத்தேன். இன்று அது கிடைத்திருக்கிறது. நான் மிகவும் சீரியஸான நபர் கிடையாது. ஜாலியான நபர் தான்.

ஆனால் அமரன் மாதிரி ஒரு சீரியஸான படத்தில் நடித்த பிறகு ‘ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பாராட்டினார்கள். அதற்காக அனைவருக்கும் நன்றி.

முக்கியமாக என் ரசிகர்களுக்கு நன்றி. எவ்வளவு பேர் என்னை அடித்து துவைத்தாலும், மிதித்தாலும் என்னை தொடர்ந்து தூக்கி மேடையில் நிற்க வைத்துக் கொண்டே இருப்பது நீங்கள் தான்.

உங்களுக்கு பிடித்த சிவாண்ணா இன்று Filmfare விருதுடன் மேடையில் நிற்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Suriya 47: 'இது ஒரு பக்கா தமிழ் திரைப்படம்'- 'சூர்யா 47' குறித்து மலையாள இயக்குநர் ஜித்து மாதவன்

💡 Suriya 47: 'இது ஒரு பக்கா தமிழ் திரைப்படம்'- 'சூர்யா 47' குறித்து மலையாள இயக்குநர் ஜித்து மாதவன்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சூர்யா, நஸ்ரியா நஸ்ரின், நஸ்லன் நடிப்பில், ஆவேசம் இயக்குநர் ஜித்து…

லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்: ஜி.வி. பிரகாஷ், அனஸ்வரா ராஜன், தேவதர்ஷினி நடிப்பில் வெளியான லக்கி படம் எப்படி இருக்கு? | Lucky The Superstar Review: How is Lucky starring G.V. Prakash, Anaswara, Devadarshini

📌 லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்: ஜி.வி. பிரகாஷ், அனஸ்வரா ராஜன், தேவதர்ஷினி நடிப்பில் வெளியான லக்கி படம் எப்படி இருக்கு? | Lucky The Superstar Review: How is Lucky starring G.V. Prakash, Anaswara, Devadarshini

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என்ற வழக்கமான பாதையில் நமக்கு நன்கு…

முத்தமழை: " 'காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ'" - பாடலாசிரியர் சிவா அனந்த் | வரித்துணையே 3 |varithunaiye series episode 3 mutha mazhai lyricist siva ananth

📌 முத்தமழை: ” ‘காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ'” – பாடலாசிரியர் சிவா அனந்த் | வரித்துணையே 3 |varithunaiye series episode 3 mutha mazhai lyricist siva ananth

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "'முத்தமழை' பாடல் நிச்சயமாக மக்களுக்குப் பிடிக்குமென நம்பினேன் 2 ஆனால்,…