🚀 SVC63: தோழா பட இயக்குநருடன் இணையும் சல்மான் கான் – வெளியான அப்டேட்!

✍️ |
SVC63: தோழா பட இயக்குநருடன் இணையும் சல்மான் கான் - வெளியான அப்டேட்!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவும், இந்தியாவும் மோதிக்கொண்டது தொடர்பாக மாத்ருபூமி என்ற பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார்

2
இப்படத்தின் பெயர் ஆரம்பத்தில், `பேட்டில் ஆஃப் கல்வான்" என்று இருந்தது

3
சமீபத்தில்தான் படத்தின் பெயர் மாற்றப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதோடு கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது

5
இதனால் படம் எப்போது திரைக்கு வரும் என்று தெரியாத நிலை இருந்து வருகிறது

📌 பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவும், இந்தியாவும் மோதிக்கொண்டது தொடர்பாக மாத்ருபூமி என்ற பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் ஆரம்பத்தில், `பேட்டில் ஆஃப் கல்வான்” என்று இருந்தது. சமீபத்தில்தான்…


பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவும், இந்தியாவும் மோதிக்கொண்டது தொடர்பாக மாத்ருபூமி என்ற பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் ஆரம்பத்தில், `பேட்டில் ஆஃப் கல்வான்” என்று இருந்தது.

சமீபத்தில்தான் படத்தின் பெயர் மாற்றப்பட்டது. அதோடு கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் படம் எப்போது திரைக்கு வரும் என்று தெரியாத நிலை இருந்து வருகிறது. இதையடுத்து சல்மான் கான் தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டார். இன்று புதிய படம் பற்றிய அறிவிப்பை சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புதிய படத்திற்கு `SVC63′ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜுவின் கூட்டணியில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது.

இன்று சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் வம்சியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் படம் அதிரடி ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்கு அம்சம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. முதல் கட்டமாக மும்பையிலும், அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இப்படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

படத்தை அடுத்த ஆண்டு ஈத் பண்டிகைக்கு திரைக்குக் கொண்டு வர சல்மான் கான் திட்டமிட்டுள்ளார். `SVC63′ படத்தின் மூலம், வம்சி பைடிப்பள்ளியுடன் இணையும் முதல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை சல்மான் கான் பெறுகிறார்.

வம்சி தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றிய ஒரு வலுவான பின்னணியைக் கொண்டவர். அதிரடி ஆக்ஷன் படங்கள் மற்றும் உணர்ச்சிகரமான குடும்பக் கதைகளை சமமாக கையாளுவதில் அவர் வல்லவர். நடிகர் விஜய் நடித்த வாரிசு படம், நடிகர் மகேஷ் பாபுவின் விவசாயம் சார்ந்த மகரிஷி, தோழா போன்ற முக்கிய படங்களை இயக்கி இருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"'யூத்' படத்தில் அறிமுக நடிகர் நடித்திருப்பதால் பாடல்கள் உரிமத்தை வாங்கவரவில்லை!" - ஜி.வி. பிரகாஷ் |Since debut actor starred in the film 'Youth', no one came forward to acquire the music rights!" - G.V.Prakash

🔥 “‘யூத்’ படத்தில் அறிமுக நடிகர் நடித்திருப்பதால் பாடல்கள் உரிமத்தை வாங்கவரவில்லை!” – ஜி.வி. பிரகாஷ் |Since debut actor starred in the film ‘Youth’, no one came forward to acquire the music rights!” – G.V.Prakash

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அந்தப் பேட்டியில் அவர், "அந்தப் படத்தை சம்பளம் பெறாமல் செய்ததற்கு…

லீடர்: ``கடவுள் எதையும் நேரடியாகச் செய்வதில்லை" - லெஜண்ட் சரவணன் | Leader: "God does nothing directly" - Legend Saravanan

💡 லீடர்: “கடவுள் எதையும் நேரடியாகச் செய்வதில்லை” – லெஜண்ட் சரவணன் | Leader: “God does nothing directly” – Legend Saravanan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜார்ஜியா ஏர்போர்ட்ட்டில் -14 டிகிரி கடும் குளிரில், கை கால்கள்…

சாதி, மதம் அற்றவன் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கும் பார்த்திபன்! |Parthiban applies for a 'Caste and Religion-free' certificate!

💡 சாதி, மதம் அற்றவன் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கும் பார்த்திபன்! |Parthiban applies for a ‘Caste and Religion-free’ certificate!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 என்னுடைய தாய் மொழி தெலுங்காக இருந்தும் நான் தமிழ் இத்தனை…